உடல் பருமன் இருப்பவர்கள் அனைவரும் பொதுவாக தங்கள் உடல் எடையை முடிந்த வரை வேகமாக குறைக்க விரும்புவார்கள். அவர்கள் மனதில் ஒரு மாதத்திற்குள் 8 - 10 கிலோ அளவில் உடல் எடையை குறைக்கும் எண்ணம் இருக்கும். இது போன்ற வேகமாக உடல் எடை குறைக்கும் விஷயத்தில், நாம் பல்வேறு செயல்களை கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுவோம். இப்படி செய்யும் அனைத்து செயல்களுமே உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. எனவே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய உடல் எடை குறைக்கும் வழிகளை தவிர்க்க வேண்டும்.
இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ
குறைந்த நேரத்திலேயே உடல் எடையை குறைக்க முடியாது என்பது அதற்கான அர்த்தம் கிடையாது. ஆனால் அந்த வழிமுறைகள் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்குமாறு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் உணவுகளை சாப்பிடாமல் கைவிட்டாலும் ஆபத்து தான் அல்லது அளவுக்கதிகமான உடற்பயிற்சிகளை ஒரேயடியாக மேற்கொள்வதும் ஆபத்து தான். இது போன்ற செயல்களை செய்து உடல் எடையை குறைத்தால் மீண்டும் அதே உடல் எடை சில மாதங்கள் கழித்து கூடி விடும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த செயல்கள் உங்கள் உடல் நிலையை பாதித்து விடும்.
சில உணவு வகைகளை முழுமையாக தவிர்ப்பது
நாம் உடல் எடை குறைப்பு செயலில் இருக்கும் போது சில உணவுகளை தவிர்ப்பது சகஜம் தான். ஆனால் அதை எப்போதும் உங்கள் உணவு பட்டியலில் இருந்து முழுமையாக தவிர்க்க நினைப்பது நல்லதல்ல. எல்லா விதமான உணவுகளும் நம் உடலுக்கு ஒவ்வொரு வகையில் ஊட்டச்சத்துக்கள் தரக்கூடியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே உங்கள் உணவு பழக்கத்தில் இருந்து எந்த விதமான உணவு வகைகளையும் விலக்க கூடாது, எல்லா உணவு வகைகளும் சேர்த்து கொண்டால் தான் சமச்சீர் உணவு உடலுக்கு கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைப்பிற்கான ஷேக்குகள் அருந்துவது
உடல் எடை குறைப்பு செயலில் நீங்கள் இறங்கும் போது ஏதாவது ஒரு ஷேக்குகள் எடுத்து கொள்ளலாம். இதில் காலை உணவாக அல்லது மதிய உணவாக ப்ரோட்டீன் ஷேக் எடுத்து கொள்வது சிறந்தது. இவை நம் ஒரு நாளுக்கான ஊட்டச்சத்துகளை முழுமையாக கொடுக்கிறது. ஆனால் எப்போதும் இந்த ஒன்றையே நம்பி இருக்க கூடாது. நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் ப்ரோட்டீன் ஷேக்கால் மட்டும் தர முடியாது. இதையே மூன்று வேளையும் உட்கொள்ள உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டங்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. இன்னொரு பக்கம் இந்த புரத ஷேக்கை நீங்கள் நீண்ட நாட்களாக உட்கொண்டு, பின் திட உணவுகளை எடுத்துக் கொள்ள உடல் எடை மறுபடியும் கூடி விடும்.
அதிகமாக உடற்பயிற்சி
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி அவசியம் தான். இதனால் ஒரு சிலர் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை உடற்பயிற்சி நிலையத்திலேயே தங்கள் நேரத்தை செலவழிப்பார்கள். இதன் மூலம் தங்கள் உடல் எடை பெரும்பாலும் வேகமாக குறைந்து விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் இது போன்ற உடற்பயிற்சி உடலுக்கு தீங்கினை ஏற்படுத்த கூடியது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வர நம் உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் ஆகிவிடும்
உணவு பழக்கத்தில் மிகவும் கண்டிப்புடன் இருப்பது
இது பொதுவாக அனைவரும் செய்யும் செயல் தான். உடல் எடை குறைப்பின் போது நாம் சில உணவுகளை இயற்கையாகவே தவிர்க்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இவ்வாறு செய்ய உங்கள் உணவின் மீது இருக்கும் ஆசை அதிகமாகும். இதனால் உடல் எடை குறைப்பு சற்று சிரமமாக மாறும். உடல் எடை குறைப்பு ஒரு பாரமாக மாறி இறுதியில் நீங்கள் அளவுக்கதிகமாக உணவை உண்ண தொடங்கி விடுவீர்கள். இது போன்ற சமயத்தில் வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் கொஞ்சம் அதிக உணவை சாப்பிடலாம். இது உங்களது உடல் எடை குறைப்பதற்கு ஊக்கத்தை தரும்.
எனவே இனி நீங்களும் உடல் எடையை குறைக்க இது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. இதற்கு மாற்றாக நல்ல ஆரோக்கியம் நிறைந்த செயல்களை செய்து எடையை குறைக்கலாம்.
இதுவும் உதவலாம்:1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation