சங்கு பூ பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். சமீப காலத்தில், சங்கு பூ செடியில் இருக்கும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்த செடியை பற்றிய ஆய்வுகள் அதிகம் மேற்கொண்டு வருகின்றனர். சில ஆய்வுகளின் கூற்றுபடி, நம் சரும மற்றும் தலைமுடி அழகினை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. சங்கு பூவில் இருந்து தயாரிக்கும் ப்ளூ தேநீரின் நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர் கரிமா கோயல் ஜீ, கூறுகிறார். இந்த நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளும் முன், இதை பற்றிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆசிய நாட்டை பிறப்பிடமாக கொண்ட சங்கு பூவின் விஞ்ஞான பெயர் க்ளிடோரியா டெர்னாடீ என்பதாகும். இப்பூவின் அடர்ந்த நீல நிறம் தான் சங்கு பூவின் அடையாளமாக நமக்கு தெரியும். மேலும் சங்கு பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் கலவையான ஆந்தோ சயானின்கள் அதிகம் உள்ளன. இந்த கலவை தான் சங்கு பூவில் தனிப்பட்ட நீல நிறம் ஏற்பட காரணமாக இருக்கிறது.
கரிமா கோயல் ஜீ கூறுவது, 'சங்கு பூவை சுடு தண்ணீரில் ஊற வைத்த பின்பு கிடைக்கும் மூலிகை கலவையை தான் ப்ளூ டீ என்கிறார்கள். இதில் அதிகப்படியாக உள்ள ஆந்தோ சயானின்கள் தான் உடலுக்கு இது ஆரோக்கியமான பலன்கள் தருவதற்கான காரணமாக இருக்கிறது. இது மிகவும் முக்கியமான நன்மைகள் தருகிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
இதுவும் உதவலாம்:1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
இந்த டீயில் காஃபீன் சிறிதும் இல்லை. இதுவே இதன் சிறந்த நன்மை ஆகும்.
இதற்கு மனித ஆராய்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தாலும், வெவ்வேறு மிருகங்களை வைத்து நடத்திய ஆய்வுகள் மூலம் இந்த பூவில் உடல் எடை குறைக்கும் குணங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்க பட்டது. சங்கு பூ தாவரத்தில் உள்ள கூறுகள் தான் கொழுப்பு செல்களின் வளர்ச்சியை மெதுவாக ஆக்குகின்றன. மேலும், இது கல்லீரல் கொழுப்பு வியாதியை தடுத்து எதிர்க்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. இதனால் தொப்பை வயிறை குறைக்கிறது. கல்லீரல் கொழுப்பு வியாதி தான் தொப்பை வயிறு ஏற்பட காரணம்.
இந்த ப்ளூ டீயில் அதிகமான ஃபைடோ கெமிக்கல்ஸ் எனப்படும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இவற்றிற்கு சிறந்த நச்சு நீக்கும் தன்மை உள்ளது. எனவே இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ப்ளூ தேநீரை மட்டுமே குடிப்பது ஒரு சிறந்த பலனை தரும் செயல்.
இதில் பலமான டையூரடிக் தன்மை இருக்கிறது. உடலில் தக்க வைக்கப்படும் அதிகப்படியான நீரை குறைக்கிறது.
ப்ளூ டீயில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. இதை குடிப்பது நம் சருமத்திற்கு உகந்தது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் இளம் வயதிலேயே ஏற்படும் முதிர்ச்சி தன்மையை குறைக்கிறது. ப்ளூ டீயில் இருக்கும் ஃப்ளேவனாயிட்ஸ் நம் சருமத்திற்கு கொலாஜன் தன்மையை அதிகப்படுத்தும். முகத்தின் இலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தும்.
இந்த அழகிய நிறமுள்ள வடிகட்டிய நீர் தான் வைட்டமின்கள், தாதுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் உறைவிடமாக இருக்கிறது. இது தலைமுடியை பலமாக்கி அதை செழிப்பாக வளர செய்கிறது. ப்ளூ டீயில் உள்ள ஆந்தோ சயானின்கள் இரத்த ஓட்டத்தை உச்சி மண்டையில் அதிகப்படுத்தி முடியின் வேர் கால்களை பலமாக்குகிறது
இந்த பானம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் சிறந்த பானமாக இருக்கிறது. எனவே நாள்பட்ட இதய நோய், வளர்சிதை மாற்றம் பிரச்சனை, அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றை எதிர்த்து போராடும்.
மேற்கூறிய படி இதில் அளவுக்கு அதிகமாக ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. எனவே ப்ளூ டீ குடித்தால் நமக்கு சில சமயம் ஏற்படும் கோபம், மனஅழுத்தம் ஆகியவற்றை போக்கிவிடும். நம் மனதை உற்சாகப்படுத்தி, அழுத்தத்தை குறைக்கும். மனமும் லேசாகும்.
மூளைக்கு புத்துணர்வை தரும் டானிக்காக இருக்கும். எனவே சிறந்த முறையில் மூளையின் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.
ப்ளூ டீ சமீப காலமாக மிக பிரசித்தமாக இருக்கிறது. இது அனைத்து கடைகளில் எளிமையாக கிடைக்கிறது. இதற்கு மிக குறைந்த பக்க விளைவுகள் மட்டுமே இருக்கின்றன.
இதுவும் உதவலாம்:2 வாரங்களில் 10 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த உணவு முறையை பின்பற்றுங்கள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]