herzindagi
diabetes and chia seeds tip

Are Chia Seeds Good For Diabetes in Tamil : சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?

சியா விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
Editorial
Updated:- 2023-02-04, 08:00 IST

சியா விதைகள் சிறியதாக இருந்தாலும் பல ஆரோக்கிய நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. பழங்காலத்தில் அழகு சாதனங்கள், மத சடங்குகள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக சியா விதைகளை பயன்படுத்தினர். இன்றளவும் சியா விதைகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

இதைக் கொண்டு பல்வேறு விதமான ரெசிபிக்களை செய்யலாம். சியா விதைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சியா விதைகள்

diabetes

சியா விதைகளை சாப்பிடுவது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு சில விலங்குகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சியா விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக Healthline இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சில மனிதர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் நேர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது.

2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, வெறும் பிரட் சாப்பிட்டவர்களை விட, பிரட் உடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிட்ட ஆரோக்கியமான பெரியவர்களின் சர்க்கரை அளவுகள்(உணவுக்குப் பிந்தைய) குறைந்து காணப்பட்டன.

சியா விதைகளின் மற்ற நன்மைகள்

சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தாதுக்கள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், எலும்புகளை உறுதியாக வைத்திருக்கவும் மற்றும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகின்றன. சியா விதைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பின்வரும் நன்மைகளை பெறலாம்.

1. எடை இழப்புக்கு உதவுகிறது

diabetes

Healthline இன் கூற்றுப்படி 28 கிராம் சியா விதைகளில் கிட்டத்தட்ட 10 கிராம் உணவு நார்ச்சத்துக்கள் உள்ளன. அதன் எடைக்கு 35% நிகருள்ள நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அதிகப்படியான எடை மற்றும் உடல் பருமனை தடுக்க உதவுகிறது. சியா விதைகளில் உள்ள புரதம், பசி மற்றும் உணவு உட்கொள்ளலை குறைக்க உதவுகிறது.

2. இதய நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது

அதிக நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 நிறைந்த சியா விதைகளை சாப்பிடுவது இதய நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்:சர்க்கரை நோய் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளை விரட்டும் வெண்டைக்காய்

3. எலும்புகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.

சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உட்பட எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவுகள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]