herzindagi
food diabetes tips

Foods to Control Diabetes in Tamil : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவுகள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருந்துகளைத் தேடுகிறீர்களா?  அப்ப  இந்த பதிவு கட்டாயம் உங்களுக்கு உதவும்.
Editorial
Updated:- 2023-01-29, 09:39 IST

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? அதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். அதற்கு இந்த பதிவு உங்களுக்கு கைக்கொடுக்கும். ஆம், நீரிழிவு நோய் என்பது மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான மற்றும் சவாலான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாகும்.

உலக மக்கள் தொகையில் சுமார் 11% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம், அதை நிர்வகிப்பது சவாலானது. எனினும், சாத்தியமற்றதல்ல. ஆயுர்வேதம் ஒரு பழங்கால மருத்துவ அறிவியல் ஆகும், இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தீர்வுகளை பரிந்துரைக்கிறது. இந்த பதிவில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது பற்றிய பயனுள்ள தகவல்களை பற்றி பார்க்கலாம்.

இதுக்குறித்து விரிவாக அறிந்து ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம். இந்த தகவலை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பவ்சர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நிபுணரின் கருத்து

அவர் ” ஆயுர்வேதம் எளிய சமையலறை மூலிகைகளின் உதவியுடன் நீரிழிவு நோயை தடுக்கும் மற்றும் கட்டுக்குள் வைக்கும்” என்கிறார். ஆயுர்வேதம் பற்றிய மிக அழகான விஷயம் என்னவென்றால் நோயைத் தடுப்பது / சிகிச்சையளிப்பது மட்டுமில்லை அதன் சிக்கல்களை தடுக்கவும் இது உதவுகிறது. உதாரணமாக , நீரிழிவு நோயாளிகள் (5+ வருடங்கள்) நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொண்டாலும், எதிர்காலத்தில் அதிக கொழுப்பு / இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தை தேர்வு செய்தால், அது நிச்சயமாக சர்க்கரை அளவை சமநிலைக்கு கொண்டு வரும். அதே நேரத்தில் அதன் சிக்கல்களை தடுக்கவும் உதவும்.

இந்த பதிவும் உதவலாம்:வீட்டிலேயே இருமலுக்கான மிட்டாய் செய்வது எப்படி?

உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைத் தடுக்க/கட்டுக்குள் வைத்திருக்க உதவும் நீரிழிவுக்கான 3 சூப்பர் உணவுகளை இங்கே பார்க்கலாம். (டைப் 2 மற்றும் டைப் 1 நீரிழிவு நோய் இரண்டிற்கும் இது வேலை செய்கிறது).

food tamil diabetes

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் பட்டை

இலவங்கப் பட்டை இன்சுலின் எதிர்ப்பை குறைக்கிறது. உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பை கரைக்கவும், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

செயல்முறை

  • 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டையில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தயப் பொடியை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
  • ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டையை மூலிகை டீயில் சேர்த்தும் குடிக்கலாம்.

நீரழிவுக்கு நோய்க்கு ஏற்ற கருப்பு மிளகு

இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கூடவே சர்க்கரை கூர்மைகளையும் தடுக்கிறது.கருப்பு மிளகில் இருக்கும் பைபரின் என்கிற வேதிப்பொருள் ரத்தத்தின் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது..

செயல்முறை

•இடித்த கருப்பு மிளகுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை வெறும் வயிற்றில் அல்லது இரவு உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உண்ண வேண்டும்.

நீரிழிவு நோய்க்கு உதவும் வெந்தயம்

இதில் இருக்கும் கசப்பு சுவை மற்றும் சூட்டை குறைக்கும் சக்தி காரணமாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு ஏற்ற சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக வெந்தயம் உள்ளது. இது ரத்த சர்க்கரையை குறைக்கிறது, குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருக்கும் மொத்த கொழுப்பு, எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.

செயல்முறை

  • 1 டீஸ்பூன் (5 கிராம்) வெந்தய பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் அல்லது உறங்க செல்லும் போது குடிக்க வேண்டும்.
  • 1/2 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் பருக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்:கேன்சர் முதல் பல நோய்களுக்கு மருந்தாகும் மல்பெரி பழம்

நீங்களும் இந்த ஆயுர்வேத உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]