Breast Milk Increasing Food: தாய்ப்பால் பஞ்சமில்லாதா கிடைக்க தாய்மார்கள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடலாம்

பால் கொடுக்கும் தாய்மார்கள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் பால் அதிகமாக கிடைக்கும். இது ஒரு பாருவக்கால உணவாக இருந்து வருகிறது. இதனை எப்படி சமைத்து சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்

Cassava tuber image

மரவள்ளிக் கிழங்கைக் கப்ப கிழங்கு, குச்சி கிழங்கு மற்றும் மரச்சினி கிழங்கு என அழைப்பார்கள். ஜவ்வரிசியை மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கின்றனர் மற்றும் சில மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். எந்த உணவுகள் தாய்ப்பாலை அதிகரிக்கும் என்று பாரம்பரியம் வழிகளில் செய்யப்படுகிறது. அதில் மரவள்ளிக் கிழங்கும் ஒன்றாகும். மரவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து அதிகமாக இருக்கின்றது. இதை தவிர வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் பி6, கால்சியம், மெக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாடியம் மற்றும் சோடியம் உள்ளது. இந்த கிழங்கை எந்த வகையில் எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.

தாய்மார்கள் மரவள்ளிக் கிழங்கை உணவி சேர்க்கும் முறை

  • மரவள்ளிக் கிழங்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு போதுமாக பால் கிடைக்க இது நல்ல பலன் தரும்.
  • சிறிதளவு மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து அப்படியே சாப்பிடலாம். கடைசியாக மரவள்ளிக் கிழங்கு நன்றாக ஜீரணிக்க ஒரு சிறு துண்டு வெல்லம் சாப்பிடுங்கள் இல்லையென்றால் பெருங்காயம் எடுத்துக்கொள்ளலாம்.
Breast Milk inside
  • மரவள்ளிக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து அதனை சாப்பிடலாம் இல்லையென்றால் வேகவைத்த மரவள்ளிக் கிழங்கில் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
  • மரவள்ளிக் கிழங்கை திருவி அதனை துணியில் கட்டி பால் எடுத்து தோசை மாவுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். துருவிய சக்கை மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து எடுத்து துருவிய தேங்காய், ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
Cassava tuber inside
  • வேகவைத்த மரவள்ளிக் கிழங்கை சிறுதுண்டுகளாக நருக்கி, ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து அதில் கிழங்கை மற்றும் தேவையான உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
  • மரவள்ளிக் கிழங்கை புட்டு, பொரியல், வடை மற்றும் போண்டா போன்ற பல வகையில் ருசியாகச் சமைத்து தாய்மார்கள் உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP