வாழைப்பூ உடலும் அற்புதமான நலன்களை கொண்டுள்ளது. தமிழர்கள் சலையல் வகைகளில் வாழைப்பூ ஒரு பகுதியாக இருந்து வருகிறது. வாழைப்பூவில் கால்சியம, நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் ஏ, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. வாழைப்பூ உணவுகள் ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர்பெற்றதாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க: மழைக்காலங்களில் சளி மற்றும் இருமலில் இருந்து காப்பாற்றும் பானம்
இளம் பெண்களுக்கு சினைப்பையில் இருக்கக்கூடிய நீர்க்கட்டிகள் மற்றும் கர்ப்பப்பை கட்டி இருக்கக்கூடிய பெண்கள் சாப்பிடலாம். வாழைப்பூவை ஒரு மண்டலம் காலையில் ஜூஸ் போல் எடுத்துக்கொண்டால் கர்ப்பப்பை பிரச்சனைகள் இருக்காது. வாழைப்பூவில் இருக்கும் நார்களை எடுத்துவிட்டு, பூக்களை சிறிதாக நருக்கி, மோருடன் சேர்த்துக் குடித்து வரலாம். சுவைக்காகச் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.
வாழைப்பூ இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தம் உடலுக்கு வேகமாக செயல்பட தொடங்குகிறது. மேலும் இரத்த நாளங்களில் ஒட்டி இருக்கும் கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. வாழைப்பூ இரத்த சோகையை குரைத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது.
மலச்சிக்கலுக்கு வாழைப்பூ ஒரு அற்புதமான உணவாக இருக்கிறது. இது மலமிளக்கியாக இருக்கிறது, இதற்கு காரணம் இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து இரண்டுமே இருக்கிறது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்குச் சிறுநீர் பிரச்சனைகள் வராமல் இருக்கும். மூல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
வாழைப்பூவில் இருக்கும் இரும்புச் சத்து இரத்தத்திற்கு நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து, மாவுச்சத்துகளில் இருக்கும் கிளைசெமிக் இன்டெஸை மாற்றி அமைக்கும். இதனால் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பதை தடுக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாழைப்பூவை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம். ஊட்டச்சத்து குறைபட்டால் பல் வலி, ஈறுகளில் இரத்தம் வடிதல், வாய் மற்றும் பற்கள் இடுக்குகளில் இருக்கும் கிருமிகள் பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவுகிறது.
வாழைப்பூவில் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றது. இதனால் வாழைப்பூவை தினமும் உணவில் பொரியலாகச் சேர்க்கலாம், கடலை பருப்பு சேர்த்து கூட்டு போல் சமைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க: உடலை மோசமடைய செய்யும் இரத்த சோகையைக் குணப்படுத்தும் உணவு அட்டவணை
வாழைப்பூவில் பொட்டசியன் சத்துக்கள் அதிகம் உள்ளதால். இதய நலத்திற்கு பொட்டசியம் சத்துகள் நல்ல பலனைத் தருகிறது. இதயம் சம்பந்தமாக நோய்கள் ஏற்படாமல் இருக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]