சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா ? சர்க்கரை அளவு அதிகரிக்குமா ?

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிட்டால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்குமா ? உண்மை என்ன ? உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

fruits for diabetes

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனாக உள்ளவர்களுக்கு கடுமையான உணவுமுறையை பின்பற்றும் பழங்களை பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதுவரை தின்பண்டங்களை சாப்பிட்டு உடலில் பல்வேறு நோய்களை வரவழைத்து கொண்ட பிறகே பழங்களின் அருமை புரியும். இதில் இப்போதும் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. பழங்கள் சாப்பிடலாமா ? எந்த பழம் சர்க்கரை நோயை அதிகரிக்கும் ? இந்த கட்டுரையில் அதற்கான விடையை காண்போம்.

fruit choices for diabetes

பொதுவாகவே பழங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் இருக்கும் ஊட்டச்சத்து காரணத்திற்காக மட்டுமா ? கிடையாது. இனிப்பு உள்ளடக்கம் காரணமாக நமக்கு பழங்களை பிடிக்கிறது. பழங்களை பார்த்தவுடன் அதை ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மூளையில் இயல்பாகவே இருக்கிறது.

மற்ற உணவுகளை விட பழங்கள் எந்த அளவிற்கு உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என தெரிந்து கொள்வோம். உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க நாம் உட்கொள்ளும் உணவுகளில் எந்த அளவிற்கு மாவுச்சத்து இருக்கிறது என்பது முக்கியம்.

அதே போல Glycemic index, glycemic load பொறுத்து சர்க்கரை நோயாளிக்கு உணவுமுறை திட்டமிடப்படுகிறது. பொதுவாக பழங்கள் இனிப்பதற்கு அதிலிருக்கும் சர்க்கரை தான் காரணம். பழங்களில் மூன்று விதமான சர்க்கரை இருக்கும். அதாவது குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ். ஒவ்வொரு பழத்திலும் இந்த அளவுகள் வேறுபடும்.

பழங்களில் உள்ள மாவுச்சத்து அளவுகளும் உடலில் சர்க்கரை அதிகரிப்பதற்கு காரணமாகும். உதாரணமாக 100 கிராம் பழத்தில் மாவுச்சத்து அளவுகளை பார்ப்போம். அதிக மாவுச்சத்து கொண்ட பழம் என்றால் அது வாழைப்பழம் தான். 100 கிராம் வாழைப்பழத்தில் 22 கிராம் மாவுச்சத்து இருக்கிறது.

மேலும் படிங்ககுதிகால் வலிப்பதற்கான காரணம் என்ன ? சில பயிற்கள் செய்து நிவாரணம் பெறலாம்

திராட்சை, மாதுளை பழத்தில் தலா 18 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. மாம்பழம், கொய்யா, ஆப்பிள், அன்னாசி பழம் ஆகியவற்றில் 13 கிராம் - 14 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. பப்பாளியில் 12 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. ஆரஞ்சு, தர்பூசணியில் எட்டு கிராம் மாவுச்சத்து இருக்கிறது. பெர்ரி மற்றும் நாவல் பழத்தில் தலா ஐந்து கிராம் மாவுச்சத்து இருக்கிறது.

இதை தற்போது உணவுகளுடன் ஒப்பிடலாம். 100 கிராம் சாதத்தில் 27 கிராம் மாவுச்சத்தும், சப்பாத்தியில் 50 கிராம் மாவுச்சத்தும், ராகி தோசையில் 50 கிராம் மாவுச்சத்தும் இருக்கிறது. அதாவது 100 கிராம் அளவில் பழங்களை விட உணவுகளில் ஐந்து மடங்கு மாவுச்சத்து அதிகம் உள்ளது.

கிளைசெமிக் குறியீடும் உடலில் சர்க்கரை அளவுகளை தீர்மானிக்கிறது. வாழைப்பழம் - 58, மாம்பழம் - 52, அரிசி - 72, கோதுமை - 65, சிறுதானியம் - 55 கிளைசெமிக் குறியீடு உள்ளது. இதுவும் ஏறக்குறைய சமமாக உள்ளது. ஒரே நாளில் அரை கிலோ பழம் சாப்பிட்டால் தான் பிரக்டோஸ் அளவுகளால் கல்லீரலில் தாக்கம் ஏற்பட்டு நோய் வரும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாம். ஜூஸ் போட்டு குடிப்பதை விட தவிர்க்கவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP