herzindagi
heel pain exercises

குதிகால் வலிப்பதற்கான காரணம் என்ன ? சில பயிற்கள் செய்து நிவாரணம் பெறலாம்

குதிகால் வலியினால் மாடிப்படி ஏற கவலைப்படுகிறீர்களா ? இனி கவலைப்பட தேவையில்லை. இந்த கட்டுரையில் உங்களுக்கான தீர்வு இருக்கிறது.
Editorial
Updated:- 2024-03-28, 18:12 IST

பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் குதிகால் வலியும் ஒன்று. குதிகால் எதனால் வலிக்கிறது, என்ன காரணம் என சரியான புரிதல் நம்மிடத்தில் இல்லை. முன்பெல்லாம் வயதான பெண்களுக்கு ஏற்பட்ட குதிகால் பிரச்சினை தற்போது இளம் வயது பெண்களுக்கும் ஏற்படுகிறது. காலையில் எழுந்து பாதத்தை தரையில் வைக்கும் போது பயங்கரமாக வலிக்கும். பிறகு பகல் நேரத்தில் வலி கொஞ்சம் குறைந்தது போல இருக்கும். அதன் பிறகு மீண்டும் நடக்கும் போது அல்லது நின்று கொண்டே இருந்தால் குதிகாலில் வலி ஏற்படும். இதற்கான மருத்துவ காரணம் என்ன?

exercises for heel pain

இது ஆங்கிலத்தில் Plantar fasciitis என்று சொல்லப்படுகிறது. அதாவது குதிவாதம் என்பது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியாகும். பாதத்தில் ஒரு சவ்வு இருக்கும். இந்த சவ்வில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இதுவே Plantar fasciitis எனும் குதிகால் வலி ஆகும்.

உடல் பருமனாக இருக்கும் எந்த நபருக்கும் குதிகால் வலி நிச்சயம் வரும். நமது உடல் எடையை சுமந்து நடப்பதற்கு கால்கள் உதவுகின்றன. குறிப்பிட்ட எடைக்கு மேல் அதிக சுமை கொடுப்பதால் வலி ஏற்படுகிறது. இவர்களால் படி ஏறவே முடியாது. படியை கண்டவுடனேயே பயந்துவிடுவார்கள். மேலும் உடல் எடை அதிகமான நபர்கள் திடீரென பாதத்திற்கு வேலை கொடுத்தால் சவ்வு வலிக்கும். இதனால் குதிவாதம் காயமடைந்து வலி உண்டாகிறது.

அடுத்ததாக முறையான பயிற்சி இன்றி திடீரென எசக்கு பிசக்கு ஆக ஓடுவது, மலையேறும் போது பாறைகளில் தாறுமாறாக கால்கள் வைத்து ஏறுவது உள்ளிட்ட காரணங்களால் குதிகாலில் வலி ஏற்படும்.

நீண்ட நேரம் நின்று வேலை செய்யும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து காவலர்களுக்கு இந்த பிரச்சினை கண்டிப்பாக இருக்கும். இதை நாம் தவிர்க்க முடியாது.

மேலும் படிங்க உப்புத் தண்ணீரில் தலைக்கு குளித்தால் முடி உதிருமா ? உண்மையா ? பொய்யா ?

குதிகால் வலிக்கு நிவாரணம்

  • நீங்கள் உடல் பருமனாக இருந்தால் எடையைக் குறைப்பதே இதற்கான வலி நிவாரணம். பத்து முதல் 15 கிலோ எடையைக் குறைத்தால் குதிகால் வலி மறைந்து விடும்.
  • ஓட்டப்பந்தய வீரராக விரும்பும் பெண்கள் தாங்கள் ஓடும் போது செய்யும் தவறை பயிற்சியாளரிடம் கேட்டு தெரிந்து தவறை திருத்திக் கொள்ளவும். பிசியோதெரபிஸ்ட்டை அணுகி ஆலோசனை பெற்று குதிகால் பிரச்சினையை சரி செய்யலாம். சில சமயங்களில் நீங்கள் பயன்படுத்தும் காலணியில் கூட பிரச்சினை இருக்கலாம்.
  • நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள் ஸ்ட்ரெட்சிங் செய்யவும். பின் காலில் உள்ள தசைகளை வலுப்படுத்த முயற்சிக்கவும். பத்து நிமிட பயிற்சி நல்ல பலன்களை தரும்.
  • தூங்கும் போது பாதத்தை 90 டிகிரியில் வைத்து படுக்கவும். வலி மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்து உண்மையான காரணத்தை கண்டறிந்து குதிகால் வலியை குணப்படுத்துங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]