bottle gourd juice : சுரைக்காய் நன்மைகளுக்கு இணையாக தீமைகளும் செய்யும்

சுரைக்காய் போன்ற நலம் தரும் காய்கறிகள் கூட சில சமயம் கெடுதல் விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 
bottle gourd benefits

சுரைக்காய் உடலுக்கு நலம் பயக்க்கூடிய காய் தான். உடலில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் எடை குறைப்பு மற்றும் வேறு சில நோய்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் அதன் சாறு உடலுக்கு தீங்கு தரக்கூடியதாகும். குறிப்பாக சாறாக குடிப்பது அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு தீங்கு தரும். மிக முக்கியமாக சுரைக்காய் கசப்பாக இருந்தால் சாப்பிடவே கூடாது.

அநேக பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுரைக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள், இதனால் சுரைக்காயின் மவுசும் பல மடங்கு அதிகமாகிவிட்டது. சமீப காலத்தில் பழச்சாறு கடைகளிலும் சுரைக்காய் சாறு அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. சிலருக்கு இந்த சாறை குடித்த உடனே கடுமையான வாந்தி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் வாய்வு கோளாறுகள் ஏற்படும் அபயம் உள்ளது.

bottle gourd juice

சுரைக்காய் நம் உடலை எப்படி பாதிக்கும்?

உணவுக்கலை நிபுணர் மேகா முகிஜா ஜீ இது குறித்து நம்மிடம் பகிர்ந்துள்ளார். மேகா முகீஜா, 2016 ல் நிறுவப்பட்ட ஹெல்த்மனியாவின் தலைமை உணவியல் நிபுணர் மற்றும் நிறுவனர் ஆவார்.

நிபுணர் கருத்து

மேகா முகீஜா கூறுவது, "சுரைக்காய் ஒரு குக்குர்பிடாசியே குடும்ப வகையை சேர்ந்தது, இதில் குக்குர்பிடாசின்ஸ் எனப்படும் நச்சு தன்மையுள்ள டெட்ராசைக்ளிக் ட்ரைடெர்பினாயிடு கலவை உள்ளது. இந்த கலவை கசப்பானது மற்றும் நச்சுத் தன்மை கொண்டது. '

இந்த நச்சுத்தன்மைக்கான காரணிகளை இது வரை யாரும் கூறவில்லை. எனவே மக்களுக்கு அபாயத்தை விளைவிக்கும் இது போன்ற நச்சுக்களை பற்றி தெரிய படுத்த வேண்டும். சமீப காலத்தில் சில ஆய்வுகளின் அடிப்படையில் சுரைக்காய் சாப்பிடுவதால் கடுமையான நச்சுக்கள் உடலுக்குள் சென்ரு வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு, ஹெமாட்டமெஸிஸ், ஹெமாடோசேசியா, அதிர்ச்சி மற்றும் இறப்பு ஆகியவை கூட ஏற்படும்.

சுரைக்காய் எப்படி உட்கொள்ள வேண்டும்?

bottle gourd

சுரைக்காய் சாறு செய்து குடிப்பதற்கு முன்பு அல்லது அதை எந்த முறையில் சாப்பிட்டாலும், முதலில் ஒரு துண்டு சுரைக்காயை அரிந்து பச்சையாக சுவைத்து பார்க்கவும். அது கசப்பான சுவையுடன் இருந்தால், அதை தூக்கி எறியுங்கள். கசப்பு சுவை இல்லாத பட்சத்தில், சாறாக அரைக்கலாம். ஆனால் எப்போதும் சுரைக்காய் சாறு செய்து சாப்பிடும் முன்பு நன்கு தண்ணீரில் கழுவி விட்டு சாறு செய்யவும். சுரைக்காய் சாறு செய்த 2 நிமிடத்தில் பருகி விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாக்டீரியா கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் சுரைக்காய் சாறு உட்கொண்டு, அதன் நச்சுத்தன்மை காரணமாக இறப்பு மற்றும் கடுமையாக உடல் நலம் பாதிப்புக்கு பலர் ஆளாகி இருக்கிறார்கள். எனவே சுரைக்காயை சாறாக குடிப்பதை விட வேக வைத்து சாப்பிடுவதே நலம் பயக்கும். இல்லையன்றால் சுரைக்காய் சூப்பாக பருகலாம். பாதிக்கப்பட்டு இருப்பதை விட பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது.

இதுவும் உதவலாம்:சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP