உடலின் எந்த உறுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு உரிய சிகிச்சை பெற்று குணமடைவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டாலும் நமக்கு பாதிப்பு பெரியளவில் தெரியாது. ஆனால் கண்களில் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு செயலை செய்வதற்கு கூட சிரமமாக இருக்கும். கண் பார்வையை பராமரிப்பது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்திற்கு முக்கியமானது. கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சீரான உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. மரபியல் காரணங்கள் மற்றும் வயது அதிகரிப்பதால் ஏற்படும் தாக்கம் ஆகியவை கண் பாதிப்பில் பங்கு வகிக்கின்றன. இவை இரண்டையும் தவிர்த்து சரியான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கண்களை ஆரோக்கியமாக பராமரித்து பார்வையை மேம்படுத்தவும் உதவும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது நல்ல கண் பார்வைக்கு இன்றியமையாதது மற்றும் மாலைக் கண்நோயை தடுக்க உதவும்.
கீரை மற்றும் பிற பச்சை இலை காய்கறிகள் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. இவை கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து பாதுகாப்பு தருகின்றன மற்றும் விழிப்புள்ளிச் சிதைவின் அபாயத்தைக் குறைக்கின்றன.
கேரட் போல் சர்க்கரைவள்ளிக்கிழங்கிலும் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளது. கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ-வை சர்க்கரைவள்ளிக்கிழங்கு உடலுக்கு வழங்குகிறது.
முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் மற்றும் துத்தநாகம் உள்ளது. இது விழித்திரையின் ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் அவசியமானது.
சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. இவை வறண்ட கண்கள் மற்றும் வயது தொடர்பான விழிப்புள்ளிச் சிதைவின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மேலும் படிங்க சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கொரியன் பழக்கவழக்கங்களை பின்பற்றுங்க!
ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் கண்புரை மற்றும் வழிப்புள்ளிச் சிதைவின் அபாயத்தை குறைக்கிறது.
ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் பிற பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பாதாம், வால்நட் மற்றும் ஆளி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.
வண்ண வண்ண நிறங்களில் கிடைக்கும் குடைமிளகாய் வைட்டமின் சி- சிறந்த மூலமாகும். இது கண்களில் உள்ள இரத்த நாளங்களை பராமரிக்க உதவும்.
புரோக்கோலியில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளது. இதை கண் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துக்களின் ஊற்று என சொல்லலாம்.
மேலும் படிங்க வைட்டமின் டி குறைபாடா ? தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க
கண்பார்வையை பராமரிக்கவும் மேம்படுத்தவும் ஒரு கண் நிபுணரிடம் வருடத்திற்கு இருமுறை பரிசோதனை செய்வது அவசியம். எனினும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்கு சீரான உணவு சிறந்த கண் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும். இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீங்கள் கண்பார்வையை மேம்படுத்தலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]