நல்லது நினைத்தால், நல்லதே நடக்கும் என்பார்கள். அது போல தான் பாசிட்டிவ் திங்கிங் என சொல்லப்படும் நேர்மறை சிந்தனைகள் உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். அதனால் உடல் ஆரோக்கியமும் மேம்படும். பாசிட்டிவ் திங்கிங் குறித்து பல வகையான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மேயோ கிளினிக் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் இதுக் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
நேர்மறை சிந்தனைகள், நம்முடைய எண்ணங்கள் மற்றும் அணுகுறையில் பிரதிபலிக்கிறது. வாழ்க்கையைப் பற்றிய நமது அணுகுமுறை என்ன என்பதை நம்முடைய எண்ணத்தை வைத்து மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள். மேயோ கிளினிக் வெளியிட்டுள்ள கட்டுரையில், நேர்மறை மற்றும் எதிர்மறையான ஆளுமைப் பண்புகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, மன அழுத்தத்தை குறைப்பதில் நேர்மறையான சிந்தனை முக்கிய அங்கமாகும்.
இந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்களில் நேர்மறை சிந்தனைகள் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அது நமது ஆயுளை அதிகரிப்பதாகவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. நேர்மறை சிந்தனைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:அதிகாலையில் சீக்கிரம் எழ 10 சூப்பர் டிப்ஸ்
மாயோ கிளினிக் வெளியிட்டுள்ள கட்டுரையிலும் நேர்மறையாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் தான் பல நோய்களுக்கு காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நேர்மறையாக சிந்தித்தால் உங்கள் மன அழுத்தமும் குறையும். நோய்களும் ஏற்படாது.
இந்த பதிவும் உதவலாம்:யோகா செய்வதால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்
நேர்மறை சிந்தனைகளால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும். வாழ்க்கையில் எப்போதுமே பாசிட்டிவாக இருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]