பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால் தினமும் பாதாம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளையும் நீக்குகிறது. இது தவிர தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால் முகத்தில் பொலிவு மற்றும் கூந்தலும் அழகாக இருக்கும். ஆனால், ஊறவைத்த பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் 10 ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று பார்க்கலாம்.
பாதாமை ஊறவைப்பதால் குளிர்ச்சியடைகிறது மேலும் கோடை காலத்திலும் இதை அதிகம் சாப்பிடலாம். மேலும் பாதாமை இரவு முழுவதும் ஊறவைப்பதால் பச்சையான பாதாம் பருப்பில் உள்ள லேசான கசப்புத்தன்மை நீங்கும். இது பச்சை பாதாம் பருப்பை விட சுவையாக இருக்கும். ஊறவைத்த பாதாமின் நன்மைகள் பற்றிய தகவல்களை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உணவு நிபுணர் சிம்ரன் சைனி நமக்குத் தருகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: 1 மாதத்தில் இடுப்பு மற்றும் தொடை கொழுப்பை குறைக்க ஈசியான வழிகள்
ஊறவைத்த பாதாம் மெல்லவும், ஜீரணிக்கவும் எளிதானது. ஊறவைத்த பாதாம் லிபேஸ் என்ற நொதியை வெளியிடுவதால் பாதாம் ஊறவைப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கின்றன, இது செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
ஊறவைத்த பாதாம் லிபேஸ் உட்பட பல நொதிகளை வெளியிடுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும், இது எடை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஊறவைத்த பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய பிஸியான வாழ்க்கை முறையாலும் நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், மாரடைப்புகள் அதிகரித்து வருகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டால், 'எல்.டி.எல்' அதாவது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, 'எச்.டி.எல்' அளவை, அதாவது நல்ல கொலஸ்ட்ராலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பாதாம் மூளை உணவு என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின்-ஈ நிறைந்த பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் ஃபைனிலாலனைன் உள்ளதால் நினைவகத்தை மேம்படுத்துகிறது. ஊறவைத்த பாதாமை உணவில் சேர்த்துக்கொள்வது ஏசிஎச் (அசிடைல்கொலின்) அளவை அதிகரிக்கிறது. இது ஒரு நரம்பியக்கடத்தி ஆகும், இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் அல்சைமர் நோயைத் தடுக்கிறது. இது தவிர ஊறவைத்த பாதாம் ஒமேகா -6 மற்றும் ஒமேகா -3 காரணமாக மூளைக்கு நல்லது.
ஊறவைத்த பாதாமை உண்ணும்போது அதில் உள்ள அதிக அளவு மெக்னீசியம் உடலின் மெக்னீசியத்தின் அளவை சமன் செய்கிறது. இது டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது.
ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதன் மூலம் உங்கள் சருமத்தில் இயற்கையான பொலிவைப் பெறலாம். இதில் வைட்டமின்-ஈ, மெக்னீசியம், புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் வயதான அறிகுறிகளிலிருந்து பாதுகாக்கிறது. ஆக்ஸிஜனேற்ற சேதம் காரணமாக சருமம் சேதமடைகிறது மற்றும் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. பாதாமில் உள்ள வைட்டமின் ஈ ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக கருதப்படுகிறது. கூடுதலாக, இதில் பல வகையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் சருமத்தை செல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
ஊறவைத்த பாதாம் உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, முடியை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பாதாமில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் உள்ளதால் முடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக்குகிறது, இது முடி உதிர்வை குறைக்கிறது.
ஊறவைத்த பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின்-ஈ கண் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும், பாதாமில் உள்ள துத்தநாகம் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைக்கும் டயட்டில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit- Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]