Ayurvedic Weight Loss : பிடிவாதமான தொப்பையை குறைக்க உதவும் ஆயுர்வேத குறிப்புகள்!

எவ்வளவு முயற்சி செய்தும் தொப்பையை மட்டும் குறைக்க முடியவில்லையா? இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றி விடாப்படியான தொப்பை கொழுப்பை குறைத்திடுங்கள்…

belly fat ayurveda

பள்ளிப் பருவ காலத்தில் எடை கொஞ்சம் கூடாதா என்று வருந்திய நாட்கள் போய் இன்று எடையை குறைக்க முடியாமல் சிரமப்படுகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. டயட் தொடங்கி உடற்பயிற்சி வரை எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் இந்த தொப்பையை மட்டும் குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஜங்க் உணவுகளை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுகிறீர்களா? மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்தாலும் எதுவும் பயன் தரவில்லையா? உங்களுக்கு எந்த முயற்சியும் பயன் தரவில்லை என்றால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றலாம். ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்ப உடல் எடையை குறைக்க ஆயுர்வேதம் உதவுகிறது. தொப்பையை குறைப்பதற்கான குறிப்புகளை ஆயுர்வேத மருத்துவரான ஷிகா ஷர்மா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

ஆயிர்வேதத்தின் படி, தொப்பை வர காரணம் என்ன?

belly fat ayurvedic reasons

தொப்பை வர பல காரணங்கள் இருக்கலாம். ஆயுர்வேதத்தின்படி, நம் உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களின் சமநிலையின்மையால் பல நோய்கள் ஏற்படுகின்றன. உடலில் கப தோஷம் அதிகரித்தால் உடல் பருமன் ஏற்படும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிக காரம் அல்லது இனிப்புகள் நிறைந்த உணவை சாப்பிடுவது போன்ற காரணத்தினால் உடலில் கபதோஷம் அதிகரிக்கிறது. இது உடல் பருமன் மற்றும் தொப்பைக்கு வழிவகுக்கும்.

தொப்பை குறைய என்ன செய்வது?

  • தொப்பையை குறைக்க விரும்புபவர்கள் இனிப்பு, எண்ணெய் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட முயற்சி செய்யலாம். உயிரியல் கடிகாரம் மற்றும் தோஷத்தின் தன்மைப்படி, இதுவே இரவு உணவிற்கான சரியான நேரம் ஆகும்.
  • கப தோஷத்தை சமநிலையாக வைத்துக் கொள்ளவும், தொப்பையை குறைக்கவும் தண்ணீரை சரியான அளவில் சரியான வெப்ப நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கும், உடலில் படிந்துள்ள அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.
  • இதைத் தவிர தொப்பையை குறைக்க சீரகத் தண்ணீர் அல்லது இலவங்கப்பட்டை தண்ணீரையும் குடிக்கலாம்.
belly fat ayurvedic  tea
  • தொப்பையை குறைக்க ஓடுதல், நடைப்பயிற்சி, வேகமான நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளையும் செய்யலாம். இது போன்ற பயிற்சிகள் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
  • கப தோஷத்தை சமநிலைப்படுத்த யோகா, தியானம் மற்றும் பிராணயாமம் போன்ற பயிற்சிகளும் கைகொடுக்கும். இது போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.
  • தொப்பையை குறைக்க நல்ல தூக்கம் அவசியம். தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இரவு அல்லது பகல் நேரத்தில் அதிகமாக தூங்கினால் அது கப தோஷம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: 5 கிலோ வரை எடையை குறைக்கலாம், அவலை இப்படி சமைத்து சாப்பிடுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP