உடல் தெம்பு பெற நெல்லிக்காய் ஜூஸ் வாடிக்கையாக குடிச்சு பழகுங்க

அன்றாடம் உணவுமுறையில் நெல்லிக்காயை எப்படி சேர்த்துக் கொண்டாலும் நமக்கு பல நன்மைகள் கிடைப்பது உறுதி. இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக நெல்லிக்காயின் நன்மைகளை சொல்லிக் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
image

இந்தியாவில் நெல்லிக்காய் நீண்ட காலமாக ஆயுர்வேத வைத்தியத்தில் அடிப்படை பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. நெல்லிக்காய் ஊறுகாய், தேனில் ஊறவைத்த நெல்லிக்காய், நெல்லிக்காய் ஜூஸ் என நெல்லிக்காயை சுவைக்கிறோம். உணவுமுறையில் நெல்லிக்காய் சேர்த்துக் கொள்வதால் ஒருவருக்கு அன்றாடம் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கின்றன. நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

health benefits amla juice

நோய் எதிர்ப்பு சக்திக்கு நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ் வைட்டமின் சி-ன் சிறந்த ஆதாரமாகும். வைட்டமின் சி எளிதில் கிடைக்ககூடிய இயற்கை உணவுகளில் நெல்லிக்காயும் ஒன்று. இதில் ஆக்ஸிஜனேற்ற வைட்டமினும் அடங்கும். உடலில் செல்களின் பாதுகாப்பைத் தவிர்த்து வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்புக்கும் உதவுகிறது. ஜலதோஷத்தில் இருந்து மீள்வதற்கு நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடனடி பலன் கிடைக்கும். உடலை தொற்று பாதிப்பை தடுத்திட நெல்லிக்காய் உதவுகிறது.

செரிமானத்திற்கு உதவும் நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸ் உடலின் செரிமான அமைப்புக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காய் வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. தசை பிடிப்பு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் சில அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது. நெல்லிக்காய் ஜூஸ் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதற்கும் உதவுவதாக நம்பப்படுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ்

உடலில் கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை சீர் செய்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்களுக்கு வாழ விரும்பினால் நெல்லிக்காய் ஜூஸ் தவறாமல் குடியுங்கள்.

மேலும் படிங்கபொங்கல் சாப்பிட்டதும் தூக்கம் சொக்கிட்டு வருதா ? இது தான் காரணம்

நச்சுக்களை நீக்கும் நெல்லிக்காய் ஜூஸ்

நச்சு நீக்கம், கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டிற்கு நெல்லிக்காய் ஜூஸ் பல நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காயின் மருத்துவ பண்புகள் உடலில் அசுத்தங்களை நீக்கி கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நச்சுக்கள் எளிதில் வெளியேற்றப்படுகிறது.

வளர்சிதை மாற்றத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து குடித்தால் வளர்சிதை மாற்றத்தை துரிதமாகும். எடை மேலாண்மை, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடல் ஆற்றல் அளவுகளில் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. நெல்லிக்காய் ஜூஸ் இரத்த குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். பல ஆய்வுகளில் நெல்லிக்காய் ஜூஸ் உடலில் கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கும் என தெரியவந்துள்ளது. உடலில் புரதத்தை மேம்படுத்தி கொழுப்புச் சேர்மத்தை குறைப்பதாக அறியப்படுகிறது.

ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு நெல்லிக்காய் ஜூஸ் தவறாமல் குடியுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP