இயற்கை நமக்களித்த வரமாக சில விதை உணவுகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை பொலிவோடு வைக்கும் மற்றும் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும். இப்படிப்பட்ட விதைகளை பற்றி நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சிம்ரன் சாய்னி கூறுவதாவது, "விதை வகைகளை உட்கொள்வது நமது ஆரோக்யத்திற்கு மட்டும் அல்ல, நம்முடைய அழகையும் மேம்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதச்சத்து, முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், விதைகளை சிறப்பு உணவு என்று கூறுகிறார்கள்.
இதுவும் உதவலாம் :நீங்கள் அறிந்திடாத சுக்கின் ஆரோக்கிய நன்மைகள்
வெந்தய விதைகள்
வெந்தயத்தில் பல்வ்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆல்கலாயிடுகள் உள்ளன. இதில் புரதச்சத்து, வைட்டமின்கள், நியாசின் மற்றும் ஈஸ்ட்ரோஜன் கலவைகளும் இருக்கின்றன. இதை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் என்று நம்பப்படுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளதால் செரிமான பிரச்சினைக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
நன்மைகள்
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
- மெலிந்து இருக்கும் கூந்தலை அடர்த்தியாக மாற்றுகிறது
- செரிமானத்திற்கு உதவி புரிகிறது
- சருமம் ஆரோக்யமாகவும் அழகாகவும் இருக்க துணை செய்கிறது.
ஆளி விதைகள்
கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் ஆகிய அனைத்தும் ஆளி விதைகளில் உள்ளது. இத்துடன் சேர்த்து, ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் லிஃனன் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. இவை நம் ஹார்மோன்களை சமச்சீராக்கும், மூட்டுகளை ஆரோக்கியமாக மாற்றும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் உகந்தது. இது சரும ஆரோக்கியம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்தது.
பயன்கள்
- செரிமானத்திற்கு உதவுகிறது
- முடி உதிர்தலை தடுக்கிறது
- தசைகளை பலப்படுத்துகிறது
- இதய ஆரோக்கியம் சிறப்பாக செயல்படுகிறது
- ஞாபக சக்தியை அதிகரிக்கிறது
1/2 கிண்ணம் தண்ணீரில் 1 ஸ்பூன் ஆளி விதைகள் கலந்து முதல் நாள் இரவு ஊற வைத்து விடவும். காலையில் அதை உட்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், இதை பொடியாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இதன் பயன்பாடு உடலில் சூட்டை உண்டாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் அதிகப்படியாக ஆளி விதையை பயன்படுத்த வேண்டாம்
பூசணி விதைகள்
நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான நல்ல கொழுப்புக்கள் பூசணி விதையில் அதிகளவு உள்ளன. இதில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மெக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் செரிமானம் மற்றும் எலும்புகளுக்கு நல்லது
நன்மைகள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- எடை குறைக்க உதவுகிறது.
- தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
- முடி அடர்த்தியாக இருக்க உதவுகிறது.
- முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் E மற்றும் வைட்டமின் B குறிப்பாக B6 நிறைந்துள்ளது மற்றும் நமது சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இரும்பு, நார்ச்சத்து மற்றும் பாஸ்பரஸின் நல்ல மூலமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாத்து நமது செரிமானத்தை சீராக வைக்கிறது.
நன்மைகள்
- சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
- செரிமானத்திற்கு உதவுகிறது.
- எடை குறைக்க உதவுகிறது.
- முடி உதிர்வதை நிறுத்துகிறது.
பேசில் சீட்ஸ்
பேசில் விதைகள் சியா விதைகளைப் போலவே இருக்கின்றன, நார்ச்சத்து அதிகமாகவும், கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருப்பதால், இந்த விதைகள் உங்களை முழுதாக வைத்திருப்பதில் திறம்பட செயல்படுகின்றன, இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நன்மைகள்
- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
- செரிமானத்திற்கு உதவுகிறது.
- முடி உதிர்வதை நிறுத்துகிறது.
- தசைகளை வலுவாக்குகிறது
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் சிறந்தவை எடையை குறைக்கவும் உதவுகிறது. சியா விதைகள் சரும அமைப்பை மேம்படுத்தவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
நன்மைகள்
- எலும்புகளை வலுவாக்கிறது.
- பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- முடி மற்றும் தோலுக்கு நன்மை பயக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation