பறந்த கிராமப்புற வெளிகளில் காடுகளில், சாலை ஓரங்களில் கேட்பாரற்று அதிகப்படியாக கிடக்கும் இந்த மஞ்சள் நிற செடிகளை உங்களால் கண்டிருக்க முடியும். ஆம் இந்த பூ தான் மனிதனின் உடலில் உள்ள பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சரி செய்யும் ஆற்றல் மிகு வல்லமை கொண்டது. சித்த மருத்துவத்தில் தலையோங்கி காணப்படும் இந்த ஆவாரம் பூ மனிதனின் உடலில் நோய் உள்ள நோய்களை சரி செய்யும் வரப் பிரசாதமாக உள்ளது.
மேலும் படிக்க:"மரணத்தை தவிர அனைத்தையும் சரி செய்யும் அதிசய மூலிகை கருஞ்சீரகம்" -பெண்கள் இப்படி யூஸ் பண்ணுங்க
ஆவாரம் பூ மிக முக்கியமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. குறிப்பாக சர்க்கரை ரத்தத்தில் கலந்து இருந்தாலும், அவற்றை இரண்டே நாட்களில் சரி செய்யும் வல்லமை கொண்டது. பொங்கல் பண்டிகை காலத்தில் பலரது வீட்டிலும் இந்த ஆவாரம் பூச்செடியை நம்மால் பார்க்க முடியும். இந்த ஆவாரம் பூ செடியின் பட்டை, இலை,வேர், பூ என அனைத்தும் மனிதனின் ஒட்டுமொத்த உடல் பிரச்சினைகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது.
ஆவாரம் பூவின் அளப்பரிய நன்மைகள்
அதிலும் இந்த ஆவாரம் பூவில் தங்கச்சத்து உள்ளதாகவும் பழங்காலங்களாக கிராமப்புற மக்களால் சொல்லப்படுகிறது. இந்த ஆவாரம் பூவை தேநீராகவோ, தூளாகவோ தாராளமாக பயன்படுத்தலாம். முதியவர்களுக்கு மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சி போன்றவற்றை ஒரே மாதத்தில் சரி செய்யும் தன்மை கொண்டது.
பெரும்பாலான இளம் பெண்கள் தங்கள் முகத்தை எப்படியாவது அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, சிலர் விலை உயர்ந்த சலூன்களுக்கு சென்று தங்கள் முகத்தை அழகுப்படுத்த முயற்சி செய்கிறார்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு குறைவான பலன் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த ஆவாரம் பூ செடியை வெயிலில் காய வைத்து அதை பொடியாக அரைத்து தயிரில் கலந்து ஒரு வாரத்திற்கு காலை, இரவு குளிப்பதற்கு முன் முகத்தில் பூசி வந்தால் 10 நாட்களில் பெண்களின் சருமம் அழகு பெறும். குறிப்பாக முகத்தில் உள்ள பருக்கள், வடுக்கள், காயம் பட்ட தழும்புகள் எண்ணெய் பசை சருமம், சொறி, அரிப்பு, அலர்ஜி,என அனைத்தையும் சரி செய்யும்.
தலைமுடிக்கு ஆவாரம் பூ
ஆவாரம் பூவை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து காய்ச்சி பதப்படுத்தி பயன்படுத்தி வந்தால் கூந்தலில் வரும் பொடுகு பிரச்சனை, வறட்சி, தலைமுடியை நொறுங்கி உடைதல் போன்ற பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை கொண்டது.
சர்க்கரை நோய்

30 வயதில் இருந்து 50 வயது வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் பெண்கள், அதிலும் குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து இருந்தால் ஆவாரம் பூ வேக வைத்த சுடு நீரை குடித்து வந்தால் இந்த பிரச்சனைகள் சரி செய்யும். ஆவாரம் பூ வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால் காய்ச்சல் உடனடியாக சரியாகும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீரக தொற்று

உலர்த்தி காய வைக்கப்பட்ட ஆவாரம்பூ பொடியை வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து சுடுதண்ணீரோடு கலந்து குடித்தால், ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் சிறுநீரகத் தொற்று ஒரு வாரத்தில் சரியாகும். அதிலும் இந்த கலவையோடு பனங்கற்கண்டு சிறிது அளவு சேர்த்து தேனீராக பருகினால் உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை கொடுக்கும்.
பெண்களின் முக அழகிற்கு ஆவாரம் பூ

ஆவாரம் பூ உலர்த்திய பொடியை எலுமிச்சை தோல் ரோஜா இதழ் பச்சை பயிர் கொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றோடு கலந்து குளிக்கும் போது முகத்தில் தடவி குளித்து வந்தால் முகத்தில் உள்ள காயம்பட்ட தழும்புகள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு முகம் பிரகாசமாக பொலிவு பெறும்.
ஆவாரம் பூ பொடியை தயிரில் கலந்து, முகமூடியாக காலை குளிப்பதற்கு முன்பும் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு வாரம் பயன்படுத்தி வந்தால் சில நாட்களில் முகம் பொலிவு பெற்று அதை நீங்களே உணரும் அளவிற்கு மாற்றத்தை தெரிந்து கொள்வீர்கள்.
ஆவாரம் பூ மூலிகை கசாயம்
- ஆவாரம் பூ - 10 - 15 எண்ணிக்கையில்
- திப்பிலி- 5
- மிளகு- 5
- சுக்கு- அரைத்துண்டு
- சிற்றரத்தை- அரைத்துண்டு
செய்முறை
இவை அனைத்தையும், ஒருசேர வெயிலில் வைத்து உலர்த்தி அதை பொடியாக்கி 200 மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி எடுத்து, காலை மாலை என இரண்டு வேலைகளும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும், அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கு வரும் கைகால் வலி பிரச்சனை, உடல் முழுவதும் ஏற்படும் அசதி, பெண்களுக்கு வரும் மயக்கம், தூரப்பார்வை, கிட்ட பார்வை போன்ற பிரச்சனைகளை எளிதில் சரி செய்யும்.
ஆவாரம் பூ தேநீர்
- செடியில் இருந்து பறித்த ஆவாரம் பூ- ஒரு கைப்பிடி கொத்து
- நாட்டு சக்கரை - தேவையான அளவு
- எலுமிச்சை - 5 துளிகள்
- தேன் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் 1 சிட்டிகை
செய்முறை
முதலில் 300 மில்ல தண்ணீரை அரை கொதி நிலையில் கொதிக்க வைத்து, பின்னர் அதில் பச்சை ஆவாரம் பூவை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும், தொடர்ந்து 5 துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும், பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து மீண்டும் நன்றாக கொதிக்க வைத்து , மிதமான சூட்டில் பருகி வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் மலம் வழியாக வெளியேறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் முழுவதும் துர்நாற்றம் அகற்றப்பட்டு புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள்.
"ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" ஏன் தெரியமா?
தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்
மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ- (அகத்தியர் வரிகள்)
இத்தனை நோய்களை ஒருசேர சரி செய்யும் ஆவாரம் பூவை தான் பண்டைய காலங்களில் இருந்து ஆகச்சிறந்த பழமொழியாக "ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ" என்று மருத்துவ பழமொழியில் இருக்கிறது.
ஏனென்றால் இந்த ஆவாரம் பூவை சித்த மருத்துவ வழிகளிலும், தேனீராகவும் சுடு தண்ணீராகவும், பொடியாகவும் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மனிதனின் உடலில் உள்ள அனைத்து நோய்களும் சரியுற்று வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதனால் தான் கிராமப்புறங்களில் "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ' என்று சொல்வார்கள்.
ஒரு கிராமத்தில் ஆவாரம் பூ அதிகமாக பூத்திருந்தால் அந்த இடத்தை சுற்றியுள்ள மனிதர்கள் வெகு விரைவில் சாவை அணுக மாட்டார்கள் என்று சொல்லுவார்கள்.
மேலும் படிக்க:"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" ஏன் தெரியுமா? 30 வயது பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation