நாவல் பழம் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொடி ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நாவல் பழம் விதைப் பொடியில் உள்ளது. இந்த தகவலை ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா பகிர்ந்துள்ளார்.
நாம் அனைவரும் நாவல் பழத்தை சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம். அவற்றை தூக்கி எறியாமல் வெயிலில் காயவைத்து பொடி செய்து பின்னர் தண்ணீரில் கலந்து உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை தரும்.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நாவல் பழம் விதை பொடி மிகவும் நன்மை பயக்கும். நாவல் பழம் விதைகளில் ஜம்போலின் மற்றும் ஜாம்போசின் எனப்படும் செயலில் உள்ள பொருட்கள் உள்ளதால் இவை இரத்தத்தில் சர்க்கரை வெளியீட்டின் விகிதத்தை குறைத்து உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கின்றன.
நாவல் பழம் விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் உள்ளதால் இந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்கள் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் சரும பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கும்.
நாவல் பழம் இயற்கையாகவே உடலின் நச்சு நீக்குகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தவிர வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும் காரணங்கலால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க இந்த விதைகளின் பொடியை உட்கொள்ளலாம்.
நாவல் பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கல்லீரலுக்கு நல்லது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் கல்லீரல் செல்களைப் பாதுகாக்கின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
நாவல் பழம் விதைத் தூளில் எலாஜிக் அமிலம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும். கூடுதலாக நாவல் பழம் விதை பொடியில் பொட்டாசியம் உள்ளதால் உடலில் சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது.
நீங்களும் இந்த விதைகளை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்கலாம்.
உங்களுக்கும் உணவு தொடர்பான தகவல்கள் தேவை என்றால், கட்டுரைக்கு கீழே உள்ள கருத்து பெட்டியில் சொல்லுங்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை Harzindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit – Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]