yoga for calm mind : கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் 5 யோகாசனங்கள்

கோபம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் 5 யோகாசனங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

 
anger and stress management yoga tip

ஒரு சிலர் தங்கள் உணர்வுகளையும், கோபத்தையும் கையாளுவதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும், எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மன அழுத்தத்தை கோபம் மூலமாக வெளிப்படுத்துபவர்கள் ஒரு வட்டத்திற்குள் சிக்கி கொள்கிறார்கள். கோபத்தை வெளிப்படுத்திய பிறகு குற்ற உணர்ச்சியால் நிம்மதியையும் இழக்கிறார்கள்.

இந்த கொடிய சுழற்சியை அவ்வளவு எளிதில் உடைத்து விட முடியாது. இருப்பினும் தெரப்பி மற்றும் யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் மனதை அமைதி படுத்தலாம். இது உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி தன்னம்பிக்கையை வளர்க்கச் செய்கிறது. மேலும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான மனவலிமையை அளிக்கிறது. மன அழுத்தம் மற்றும் கோபத்தை திறம்பட கட்டுப்படுத்த உதவும் சில எளிய யோகாசனங்களை இப்போது பார்க்கலாம்.

சவாசனம்

yoga pose

இந்த யோகாசனம் பார்ப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதுகு தரையில் படும்படி அமைந்திருக்கும் இந்த தோரணையால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

  • முதலில் யோகா மேட்டை விரித்து, உங்கள் முதுகு தரையில் படும்படி நேராக படுத்துக் கொள்ளவும்.
  • பின் கால்களை நேராக்கி, கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வரவும்.
  • கண்களை மெதுவாக மூடி, சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • இது கோபப்படுவதால் அதிகரிக்கும் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை ஆசுவாசப்படுத்துகிறது.

சர்வங்காசனம்

yoga pose

இந்த ஆசனம் யோகாவை புதிதாக பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்றதல்ல. இருப்பினும் சுவர் அல்லது உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் உதவியுடன் இந்த பயிற்சியை செய்யலாம். இந்த தலைகீழ் தோரணையால், தலையில் இரத்த ஓட்டம் மேம்படும். கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகளை சமாளிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

  • முதலில் யோகா மேட்டை விரித்து, உங்கள் முதுகு தரையில் படும்படி நேராக படுத்துக் கொள்ளவும்.
  • உங்கள் கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வரவும்.
  • கைகளை தரையில் ஊன்றியபடி பாதங்களை மேலே தூக்க முயற்சி செய்யவும். இவ்வாறு செய்யும் போது மூச்சை வெளியேற்ற வேண்டும்.
  • இந்த தோரணையில் உங்கள் முழங்கால்கள் முகத்திற்கு முன்னால் இருக்க வேண்டும்.
  • உங்கள் கைகளை பயன்படுத்தி முதுகை ஆதரித்து பிடித்து கொள்ளவும்.
  • இந்த தோரணையில் இருந்தப்படி 8-10 முறை வரை சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • பின்னர் முழங்கால்களை ஒவ்வொன்றாக கீழ் இறக்கி, கால்களை தரையில் வைக்கவும்.

பரிவர்த்த ஆஞ்சநேயாசனம்

yoga pose

இந்த தோரணை முதுகுத்தண்டில் ஏற்படும் இறுக்கத்தை தணிக்க உதவுகிறது. மேலும் இடுப்புப் பகுதியை நீட்சி அடைய செய்கிறது. கோபம் மற்றும் மன அழுத்தத்தால் தசைகள் மற்றும் முதுகெலும்பில் இறுக்கும் ஏற்படலாம். இதை குறைக்க பரிவர்த்த ஆஞ்சநேயாசனம் செய்யலாம்.

ஜானு சிரசாசனம்

yoga pose

முன்னோக்கி வளையும் இந்த தோரணை அடி வயிற்றுப் பகுதிக்கு நன்மை பயக்கிறது. மேலும் முதுகெலும்பு மற்றும் முதுகு தசைகளை நீட்சி அடைய செய்கிறது. இது ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் மனதை அமைதி படுத்த உதவுகிறது.

இது பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கு சிறந்தது. இருப்பினும் மனநல சிகிச்சைகளுக்கு மாற்றாக இதை பின்பற்றக் கூடாது. மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிபுணரின் உதவியை நாட வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

yoga pose

இது மார்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் சிறந்தது. இந்த தோரணை உங்கள் மார்புத் தசைகளைத் திறந்து, முதுகெலும்பு, முதுகு மற்றும் இடுப்பு தசைகளில் இருக்கும் இறுக்கத்தை குறைக்கிறது. இது நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது. ஆக்ஸிஜன் சுழற்சி மேம்படுவதால் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இது உங்களுக்கு மன நிம்மதியை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP