இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்! உங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

முடி உதிர்வை குறைத்து, நீளமான அடர்த்தியான முடியைப் பெற விரும்பினால், இந்தப் பதிவில் உள்ளதை முயற்சி செய்து பார்க்கலாமே.

prithvi muthra big

முடி உதிர்விற்கான தீர்வு: ஆரோக்கியமான, நீண்ட அடர்த்தியான கூந்தல் என்பது இளமையின் பரிசாகும். இது பெரும்பாலும் இளமையில் அலட்சியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. முடியை சரியான முறையில் கவனிக்காவிட்டால், வயதாகும்போது அதன் தடிமன் மற்றும் பளபளப்பு குறைந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, முடி வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிகவும் அத்தியாவசியமானது.

மன அழுத்தத்தினாலும் முடி வளர்ச்சி தடைப்படலாம். முடி உதிர்கிறது என்ற கவலையோடு வைத்தியம் செய்தாலும், மன அழுத்தத்தினால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். இருப்பினும், இன்றைய உலகில், பல பெண்கள் வேலை மற்றும் வீட்டுப் பொறுப்புகளை தலையில் சுமந்து கொள்வதால், தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

மன அழுத்தம் நிறைந்த இந்த வேகமான வாழ்க்கை முறையால் நீங்களும் முடி உதிர்வை சந்திக்கிறீர்களா? எந்த எண்ணெய் மசாஜும் பயன் தரவில்லையா? உங்கள் தலைமுடி உலர்ந்து காணப்படுகிறதா? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் உங்கள் பதில் ஆம் எனில், உங்களுக்கான தீர்வு எங்களிடம் உள்ளது - அது தான் யோகா முத்திரை.

முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய யோகாசனங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், இல்லையா? இதனுடன் சில குறிப்பிட்ட முத்திரைகளும் உள்ளன - அது உடலின் ஆற்றல் ஓட்டத்தைச் செயல்படுத்தி உங்கள் மேனியை பாதுகாக்க உதவுகிறது.

முடி உதிர்தலுக்கான நிபுணர் குறிப்புக்கள்

prithvi muthra

பூங்காவில் உட்கார்ந்தோ அல்லது வீட்டில் வேலை செய்து கொண்டோ இங்கே கொடுக்கப்படுள்ள இந்த ஒரு முத்திரையைச் செய்து முடி உதிர்வதைத் தடுக்கலாம். இது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான முடியைப் பெற உதவும் இந்த முத்திரையைப் பற்றி உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜூஹி கபூரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தபிறகு நாங்கள் தெரிந்து கொண்டோம். இது போன்ற நிறைய தகவல்களை ரசிகர்களுடன் அடிக்கடி அவர் பகிர்வதுண்டு.

அவர் கூறிய தகவலின்படி,“ முடி உதிர்வைக் குறைக்கவும், முடியின் தரம் மற்றும் வலிமையை மேம்படுத்தவும் பிரித்வி முத்திரை சிறந்ததாகக் கருதப்படுகிறது. உங்கள் கட்டைவிரலின் நுனியால் மோதிர விரலைத் தொடவும். தினமும் இதை 20-30 நிமிடங்கள் பயிற்சி செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும். எப்பொழுதும் தியான நிலையில் அமர்ந்து ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடவும்" என்றுள்ளார்.

பிருத்வி முத்திரை செய்வதால் முடிக்குக் கிடைக்கும் நன்மைகள்

பிருத்வி என்பது நம் உடலில் இருக்கும் பூமியின் புலனைக் குறிக்கிறது, இதனால், முடி வளர்ச்சிக்கான புலன்கள் மேம்படுகிறது. பிருத்வி முத்திரை உடலின் பூமி புலன்களை ஊக்குவிப்பதோடு, உடலில் உள்ள நெருப்பு புலன்களைக் குறைக்கிறது, முடி திசுக்களைப் பலப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பிரித்வி முத்திரை செய்யும் முறை

prithvi muthra

  • இதைச் செய்வதற்கு, வஜ்ராசனம் அல்லது பத்மாசனம் போன்ற வசதியான தோரணையில் உட்காரவும்.
  • உங்கள் கண்களை மூடிக்கொண்டு சில ஆழ்ந்த சுவாசங்களை எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து, உங்கள் கையின் மோதிர விரலைக் கட்டைவிரலை நோக்கி வளைக்கவும்.
  • உங்கள் கட்டைவிரலின் நுனியால் மோதிர விரலின் நுனியைத் தொடவும்.
  • மீதமுள்ள மூன்று விரல்களை நீட்டவும்.
  • உங்கள் இரு கைகளாலும் இந்த முத்திரையைச் செய்யவும்.
  • உங்கள் இரு கைகளையும் தொடையின் மேல் பகுதியில் வைத்து, 'ஓ' என்று உச்சரிப்பதில் மனதை ஒருமுகப்படுத்தவும்.
  • இந்த முத்திரையைத் தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது செய்யவும்.

பிருத்வி முத்திரையின் மற்ற நன்மைகள்

prithvi muthra

  • இந்த முத்திரை முடி வளர்ச்சியை அதிகரித்து முடி உதிர்வை குறைக்கிறது.
  • உடல் வெப்பத்தை தணிக்கிறது.
  • இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.
  • கப தோஷத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
  • உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பலப்படுத்துகிறது.

யோகாவின் படி, மனித உடல் ஐம்புலன்களால் ஆனது - நெருப்பு, நீர், காற்று, பூமி மற்றும் ஆகாயம். இந்தப் புலன்களில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அடிக்கடி முடி சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடும்.

நம் விரல்களில் இந்த ஐம்புலனும் இருப்பதால் நாம், நம் கைகள் மற்றும் விரல்களைப் பயன்படுத்தி முத்திரைகளைச் செய்யும்போது, அது ஆற்றல் ஓட்டத்தை உருவாக்குகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. தலைமுடி அடர்த்தியாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உதவுகின்றது.

சில முத்திரைகள் முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது. முத்திரைகள் முடி திசுக்களை வலுப்படுத்துவதால், முடி உதிர்தல் பற்றிய கவலைகளை போக்குகிறது. எனவே முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி உதிர்வைக் குறைக்கவும், உலர்ந்த உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கவும், முடியை அடர்த்தியாக மாற்றவும் குறிப்பிட்ட முத்திரையைத் தவறாமல் பயிற்சி செய்யலாம்.

இந்த முத்திரை முடி உதிர்தலை குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP