vajrasana after meal: உணவுக்கு பிறகு வஜ்ராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தொப்பையை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உணவுக்குப் பிறகு இந்த யோகாசனத்தை செய்யலாம்.

 
vajrasana after meal benefits

உடல் பருமன் போன்ற சில பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கு மோசமான செரிமானமும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே அஜீரணம், வாயுத்தொல்லை, அசிடிட்டி, ஒற்றைத் தலைவலி, தலைவலி போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உணவுக்கு பிறகு வெறும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் மேற்கூறிய பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இவை அனைத்திற்கும் வஜ்ராசனம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. யோகாவின் பாரம்பரிய தோரணையான இந்த வஜ்ராசனத்தை உணவு சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும். இதனை 15 நிமிடங்கள் செய்வது செரிமான மண்டலத்தை சிறப்பாக செயலாற்ற உதவுகிறது.

ஒரு சில நூல்கள் வஜ்ராசனம் தோரணையில் உட்கார்ந்து சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுவதாக தெரிவிக்கின்றன. வஜ்ராசனம் தோரணையின் செய்முறை மற்றும் அதன் பலன்களை உலக யோகா அமைப்பின் நிறுவனர் ஹிமாலய சித்த அக்ஷர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

நிபுணர் கருத்து

வஜ்ராசனம் என்பது ஒரு முழங்கால் தோரணை யாகும். சமஸ்கிருதத்தில் வஜ்ரா என்ற வார்த்தைக்கு வைரம் அல்லது இடி என்று பொருள். இந்தத் தோரணை செரிமானத்திற்கு உகந்ததாக நிபுணர் கூறியுள்ளார். மேலும் இதை சாப்பிட்ட உடனேயே செய்யலாம்.

தியானம் மற்றும் பிராணாயாமத்திற்கு இது ஒரு நல்ல தோரணையாகும். இதை சாப்பிட்ட உடனேயே 15 நிமிடங்கள் செய்வது, செரிமான அமைப்பை திறம்பட செயல்பட உதவுகிறது. வஜ்ராசனம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, அடிவயிற்றை சுற்றியுள்ள கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

வஜ்ராசனம் செய்வது எப்படி?

vajrasana benefits

  • இந்த ஆசனம் செய்வதற்கு சௌகரியமான யோகா மேட்டை பயன்படுத்துவது நல்லது.
  • வஜ்ராசனம் செய்வதற்கு முதலில் தரையில் மண்டியிட்டு உட்காரவும்.
  • முழங்கால்களையும், கணுக்கால்களையும் ஒன்றாக நீட்டி பாதங்களை நேராக வைக்கவும்.
  • மூச்சை வெளியேற்றும் போது, கால்களின் மீது உட்காரவும்.
  • இடுப்பு, கணுக்கால் மற்றும் தொடை கெண்டைக்கால் பின் தசையின் மீது இருக்க வேண்டும்.
  • தொடைகளின் மீது கைகளை வைத்து, வசதியாக உட்காரவும்.
  • முதுகுத்தண்டு நேராக இருக்கும் நிலையில் உட்கார்ந்து, மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றவும்.
  • தலையைப் பயன்படுத்தி உடலை மேலே இழுத்து, முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் உள்ள எலும்பை தரையை நோக்கி அழுத்தவும்.
  • தலையை நேராக்கி முன்னோக்கி பார்க்கவும்.
  • கைகளை தளர்த்தி, உங்கள் உள்ளங்கைகளை தொடைகளின் மீது வைக்கவும்.

வஜ்ராசனத்தின் பலன்கள்

vajrasana benefits

  • உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
  • செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறது.
  • அசிடிட்டி மற்றும் வாயுத்தொல்லையை குறைக்கிறது.
  • உடலில் ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது.
  • இது இடுப்பு தசைகளை வலுப்படுத்தவும் மற்றும் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.
  • வஜ்ராசனம் சிறுநீர் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • இது தொடைகளை வலுப்படுத்தவும், மூட்டு வலியைப் போக்கவும் உதவுகிறது.
  • மனதை அமைதிப்படுத்துகிறது.
  • முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது
  • அடிவயிற்றில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
  • பாலின உறுப்புகளை வலிமையாக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்

முக்கிய குறிப்பு

பின்வரும் பிரச்சனை உள்ளவர்கள் வஜ்ராசனம் செய்வதை தவிர்க்கும்படி நிபுணர் அறிவுறுத்துகிறார்.

  • முழங்கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது முழங்கால் பிரச்சனை உள்ளவர்கள்.
  • முதுகுதண்டில் பிரச்சனை உள்ளவர்கள்.
  • குடல் புண், குடலிறக்கம் அல்லது வேறு ஏதேனும் குடல் பிரச்சனை உள்ளவர்கள்.

சாப்பிட்ட பிறகு யோகா செய்வது சர்ச்சைக்குரியதாக கருதப்படலாம். பெரும்பாலான யோகா நூல்களிலும் வெறும் வயிற்றில் யோகா செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சாப்பிட்ட உடனேயே வஜ்ராசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் 5 யோகாசனங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP