ஸ்டைலான தோற்றத்தை வெளிப்படுத்த இந்த மகளிர் தினத்திற்கு சூப்பரான பிளாஸ்ஸோ குர்தா செட்டை முயற்சிக்கவும்

அலுவலகத்தில் ஸ்டைலாகவும் வசதியாகவும், பிரமாண்டமாகவும் தோற்றத்தை வெளிப்படுத்த விரும்பினால் , நீங்கள் இந்த வகை பிளாஸ்ஸோ சூட்டைத் தேர்வு செய்யலாம், இந்த உடையில் உங்கள் தோற்றம் அழகாக பிரதிபலிக்கச் செய்யும் 
image

விதவிதமான ஆடைகளில் அழகான தோற்றத்தில் பெண்கள் அலுவலகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். இந்த மகளிர் தினத்திற்கு உங்கள் பணியிடத்தில் ஸ்டைலாகவும் வசதியாகவும் மற்றும் பிரமாண்டமான தோற்றத்தில் இருக்க பிளாஸ்ஸோ-குர்தா ஆடைகள் சரியான தேர்வாக இருக்கும். இந்த பலாஸ்ஸோ-குர்தா செட்டில் உங்கள் தோற்றம் மிகவும் அழகாக இருக்கும்.

பிளவர் பலாஸ்ஸோ-குர்தா

ஸ்டைலான தோற்றத்திற்கு மலர் வடிவம் கொண்ட பலாஸ்ஸோ-குர்தாவைத் தேர்வு செய்யலாம். மலர் வடிவமைப்புகள் மிகவும் அழகாக இருக்கும், மேலும் இந்த உடையில் தோற்றமும் பிரமாண்டமான லுக்கை தரும். மலர் வடிவமைப்பில், எம்பிராய்டரி செய்யப்பட்ட டிசைகள் கொண்ட பலாஸ்ஸோ-குர்தாவை தேர்வு செய்து அணியலாம். இந்த உடையுடன் பொருந்தக்கூடிய அழகிய காதணிகளை கொண்டு உங்களை ஸ்டைல் செய்யலாம்.

flower palazo

எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட பிளாசோ-குர்தா

எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட பலாஸ்ஸோ-குர்தா புதியவிதமாக தோற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். மேலும் இந்த எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட பலாஸ்ஸோ-குர்தாவில் உங்கள் தோற்றம் மிகவும் அழகாக இருக்கும். இந்த வகை எம்பிராய்டரி வேலைப்பாடு கொண்ட பலாஸ்ஸோ-குர்தாவை பல வடிவமைப்புகளிலும் வண்ணங்களிலும் வருகிறது. இந்த பலாஸ்ஸோ-குர்தாவில், நீங்கள் கண்ணாடி வேலைப்பாடு கொண்ட நீண்ட காதணிகளை அணிந்து அழகுப்படுத்தலாம். அலுவலகத்தில் ஸ்டைலான தோற்றத்தைப் பெற, நீங்கள் இந்த வகையான பலாஸ்ஸோ-குர்தாவையும் தேர்வு செய்யலாம்.

embroidered palazo

காட்டன் பலாஸ்ஸோ-குர்தா

காட்டன் உடைகள் வசதியான தோற்றத்தைப் பெற சிறந்த ஆடையாகும், மேலும் நீங்கள் பருத்தியில் ஏதாவது அணிய நினைத்தால் காட்டன் பலாஸ்ஸோ உடையை தேர்வு செய்யலாம், இந்த உடை புதியதாகவும் ஸ்டைலாகவும் இருக்கும், மேலும் நீங்கள் அதில் வசதியாகவும் இருப்பீர்கள். இந்த பருத்தி பலாஸ்ஸோ-குர்தா உடையுடன் நீங்கள் எளிய நகைகளை அணியலாம் மற்றும் ஸ்டைலான தோற்றத்தைப் பெற ஹீல்ஸ் காலணிகளை அணியலாம்.

cotton palazo

மேலும் படிக்க: மகளிர் தினத்திற்கு நீங்கள் அணியக்கூடிய ஆடைகளுக்கு பொருந்தக்கூடிய லேட்டஸ்ட் தங்க காதணி டிசைன்கள்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP