ஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட இதை மட்டும் பண்ணுங்க

வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக நுழைந்து பெரும் தலைவலியை கொடுக்கும் பெருச்சாலியை ஒரே நாளில் ஓட ஓட விரட்டுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள். விஷம் வைத்து கொள்ளாமல் அசாதாரண சூழலை உருவாக்கினாலே போது எலி தொல்லை ஓய்ந்துவிடும்.
image

நாம் நிம்மதியாக வாழும் வீட்டில் திடீரென எலி புகுந்து தேவையில்லாத விஷயங்களை தோண்டி எடுத்து தலைவலியை கொடுக்கும். எலிகளில் பலவகை உண்டு. சிறிய எலிகளை கூட பொறி வைத்து பிடிக்கலாம். ஆனால் இந்த பெருச்சாளிகள் சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்து கண்டதை கடித்துவிட்டு நோய் பரவலை எற்படுத்திவிடும். அவற்றை விஷயம் வைத்து கொல்லவும் நமக்கு மனம் வராது. எனவே சில எளிய வழிகளையும் தந்திரங்களையும் பயன்படுத்தி தொல்லை கொடுக்கும் பெருச்சாளிகளை எப்படி வீட்டில் இருந்து விரட்டுவது எப்படி என பார்க்கலாம்.

முதலில் வீட்டிற்குள் எங்கிருந்து நுழைகின்றன என்பதை கண்டறியவும். அதன் பிறகு அவற்றை தடுப்பது எளிதாகிவிடும். எலிகளை விரட்டிட பொறி வைத்து பிடிப்பது, அவற்றுக்கு அசாதாரணமான சூழலை உருவாக்குவது போன்ற விஷயங்களை செய்யலாம்.

get rid of rats at home

நகரவாசிகளை விட கிராமத்தில் வசிக்கும் நபர்களே அதிகளவில் எலி தொல்லைக்கு ஆளாகின்றனர். எலிகள் எப்போதுமே வீட்டிற்குள் இருக்காது. சமயம் பார்த்து மட்டுமே நுழையும். எனவே எலிகளின் என்ட்ரி மற்றும் எக்ஸிட் இடங்களை கண்டறிந்து அவற்றை செங்கல் வைத்து மூடிவிடுங்கள். ஜன்னல்கள், ஓட்டைகள் வழியாக கூட எலிகள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புண்டு. அந்த ஓட்டைகளை அடைத்துவிடுங்கள். எலிகளை கொன்றால் மட்டுமே தொல்லை ஓய்ந்துவிட்டதாக கருத முடியாது.

வீட்டில் இருந்து எலிகளை விரட்டும் முறை

இந்த பெருச்சாளிகள் வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு மட்டுமல்ல நமது ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. வீட்டில் குப்பைகளை தேங்க விடாதீர்கள். எலிகளுக்கு பிடித்தமான உணவுகளை குப்பையில் போடாதீர்கள்.

குறிப்பாக மரப்பலகை இருக்கும் இடம் பெருச்சாளிகளுக்கு வசதியானவை. எலிகள் தங்களுக்கென ஒரு மறைவிடத்தை தேடும். அப்படியான இடம் வீட்டில் இருந்தால் சுத்தப்படுத்துங்கள். சுவற்றின் ஓட்டை, கழிவுநீர் பைப் ஆகியவற்றை சோதிக்கவும்.
கிருமி நாசினி கொண்டு எலிகள் இருந்த இடத்தை சுத்தம் செய்யவும். எலிகள் உலாவிய இடங்களை கண்டறிந்து அமோனியா, விநிகர் ஆகியவற்றை தெளிக்கவும்.

எலியை விரட்ட மிளகாய் பொடி

எலியை விரட்டி பாட்டி காலத்து தந்திரத்தை இப்போதும் பயன்படுத்தலாம். அவை ஒளிந்திருக்கும் இடங்களில் மிளகாய் பொடியை தூவுங்கள். மிளகாய் பொடியின் காரம் தாங்காமல் எலி வீட்டை விட்டு தெறித்து ஓடும்.

எலி தொல்லைக்கு மிளகுக்கீரை எண்ணெய்

மிளகுக்கீரை எண்ணெய்-ஐ எலிகள் வரும் பாதையில் ஊற்றுங்கள். இதன் வாசனை எலிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அப்படியே ஓடிவிடும்.

மேலும் படிங்ககரப்பான் பூச்சி தொல்லையா ? ஒழித்து கட்டுவதற்கு இந்த வீட்டு பொருட்களை பயன்படுத்துங்க

  • பெரிய வெங்காயத்தின் வாசனை எலிகளுக்கு ஒவ்வாது. எனவே வெங்காயத்தை கெட்டுப் போகச் செய்து அவை வரும் பாதையில் வைக்கவும்.
  • அமோனியா திரவத்தை எலிகள் மீது பயன்படுத்தினால் அவற்றால் மூச்சு விட முடியாது. சுவாசத்திற்கு வெட்டவெளியை நோக்கி ஓடும்.
  • வீட்டில் பூனை இருந்தால் எலிகள் வரவே வராது.
  • எலிகளை கொல்வதற்காக அல்ல எலி பொறிகளை ஆங்காங்கே வெறுமனே வைக்கலாம். பொறிகளில் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவே எலிகள் வீட்டிற்குள் வராது.
  • வீட்டை சுற்றி பூச்சி மருந்து தெளியுங்கள். இந்த வாசனையும் எலிகளுக்கு பிடிக்காது.

இந்த வழிகளை பின்பற்றினால் பெருச்சாளி தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.


HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP