மார்க்கெட்டில் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க பவுடர், ரசாயனம், ஸ்ப்ரே என நச்சுப் பொருட்கள் உள்ளன. இந்த ரசாயனங்களை தெரியாமல் நாம் முகர்ந்துவிட்டால் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக வீட்டில் விளையாடும் குழந்தைகள் மற்றும் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணி அந்த ரசாயனங்களை தொட்டு விட்டால் பெரும் பிரச்னை ஆகிவிடும். எனவே தான் வீட்டில் உள்ள பொருட்களை வைத்துக் கரப்பான் பூச்சிகளை ஒழித்து கட்டுவது குறித்து இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 2-3 பொருட்களை வைத்தே கரப்பான் பூச்சிகளை ஒழித்து அதன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அது மட்டுமின்றி பூச்சி கொல்லியின் விலையும் அதிகமானவை. கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு அவ்வளவு செலவுசெய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்த பொருட்கள் சீப் அண்ட் பெஸ்ட் தேர்வாகும். இவை பாதுகாப்பானதும் கூட.
எல்லா நேரங்களில் கரப்பான் பூச்சிகளை கொல்ல வேண்டும் என அவசியம் கிடையாது. வீட்டை சுற்றி வலை பின்னவும். வீட்டில் உள்ள ஓட்டைகள் களிமண் அல்லது பெயின்ட் அடித்து மூடவும். வீட்டை வாரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி பயன்படுத்தி முழுமையாக சுத்தப்படுத்தவும். குப்பை தொட்டிகளை மூடியே வைக்கவும்.
முதல் வழி : சிறிதளவு போரிக் அமிலம், மைதா மாவு, சர்க்கரை மற்றும் காஃபி பவுடரை ஒன்றாகக் கலந்து வைக்கவும். கரப்பான் பூச்சிகளுக்கு காஃபி பவுடரின் வாசனையால் ஈர்க்கப்பட்டு அதை தின்று இறந்துவிடும். எனினும் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் தொடாது என உறுதி செய்யவும்.
இரண்டாம் வழி : தண்ணீர் மட்டும் இருந்தால் பொறி வைத்து கரப்பான் பூச்சிகளை விரட்டலாம். பிளாஸ்டிக் வாட்டார் பாட்டிலின் மூடிப்பகுதியை வெட்டி விடவும். அதில் பாதியளவிற்கு தண்ணீர் மற்றும் காஃபி பவுடர் கலந்து நிரப்பி வெட்டிய பகுதியை தலைகீழாக வைக்கவும். காஃபி பவுடரால் ஈர்க்கப்படும் கரப்பான் பூச்சிகள் உள்ளே செல்லும் ஆனால் வெளியே வர இயலாது.
மூன்றாம் வழி : போராக்ஸ் மற்றும் சர்க்கரை கலந்து கரப்பான் பூச்சிகளுக்கு தூண்டில் போடவும். அவை கட்டாயமாக அதை தின்று இறக்கும்.
நான்காம் வழி : வீட்டில் ரசாயன ஸ்ப்ரே எதுவும் இருந்தால் கரப்பான் பூச்சிகள் மீது தெளிக்கவும். அவற்றால் மூச்சு விட முடியாமல் கவுந்து படுக்கும். உயிரிழந்த பிறகு வீட்டிற்கு வெளியே வீசி விடலாம்.
ஐந்தாம் வழி : பேக்கிங் சோடாவை வெங்காயத்தில் மீது தடவி அவை உலாவும் இடத்தில் வைக்கவும். பெரும்பாலான நேரங்களில் இதை தின்று கரப்பான்பூச்சிகள் மயக்கம் அடையும்.
மேலும் படிங்க கரையான் தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இந்த 3 முக்கிய விஷயங்களை பின்பற்றுங்க...
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]