தொடர்ந்து 30 நாட்களுக்கு வெறும் வயிற்றில் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் என்ன ஆகும்?

பல நோய்களுக்கு அருமருந்தாகும் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது முதல் எடை இழப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் எண்ணற்ற அற்புதமான விளைவுகளை கொடுக்கும்.
  • Alagar Raj
  • Editorial
  • Updated - 2025-04-05, 22:43 IST
image

வெள்ளை பூசணிக்காய் கண் திருஷ்டியை விரட்டும் சாதாரண காய்கறி அல்ல. மகத்தான ஊட்டச்சத்து நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட சூப்பர் காய்கறியாகும். 90 விழுக்காடு நீர்ச்சத்து கொண்ட வெள்ளை பூசணிக்காயில் புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனால் பலர் தங்கள் உணவில் வெள்ளை பூசணிக்காயை சேர்க்கின்றனர். சிலர் வெள்ளை பூசணிக்காயை வேகவைத்து வதக்கி உட்கொள்வார்கள், இன்னும் சிலர் ஜூஸாக குடிப்பார்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் தினமும் காலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்குங்கள்.

வெள்ளை பூசணி ஜூஸ் நன்மைகள்

பல நோய்களுக்கு அருமருந்தாகும் வெள்ளை பூசணிக்காயை ஜூஸாக குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது முதல் எடை இழப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும். நாம் இந்த தொகுப்பில் வெள்ளை பூசணிக் ஜூஸை காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் குடித்தால் கிடைக்கும் மகத்தான நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் நச்சுக்களை வெளியேற்றும்

வெள்ளை பூசணி அதன் நச்சு நீக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. நீங்கள் காலை வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறும். இதன் காரணமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் மேம்படுத்தவோடு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இதன் மூலம் சிறுநீரக பிரச்னைகளை தடுக்க முடியும் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைக்க முடியும்.

இதய நோய்கள் தடுக்கப்படும்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டாசியம் வெள்ளை பூசணிக்காயில் இருக்கிறது. இது உடலில் நல்ல கொழுப்புகளின் அளவை பராமரிக்க உதவுகிறது. அதே போல் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. மேலும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இதனால் தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடித்தால் இதய நோய்கள் குறித்து அச்சப்பட தேவையில்லை.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

இந்த ஜூஸை தினமும் தவறாமல் குடிப்பதால் எந்த பருவ கால நோய்களும் உங்களை அண்டாது. ஏனெனில் வெள்ளை பூசணிக்காயில் உள்ளவைட்டமின் சிநோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு செல்களின் செயல் திறனை அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல நோய் தொற்றுகளிலிருந்து உங்கள் உடல் பாதுகாப்பாக இருக்கும்.

immunity power

நீர்ச்சத்து கிடைக்கும்

கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு என்பது அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று. இதன் விளைவாக சோர்வு, தலைசுற்றல், மயக்கம் உண்டாகும். எனவே தினமும் காலை வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் அந்த நாள் முழுவதும் உடல் நீர்ச்சத்துடன் இருக்கும். ஏனெனில் வெள்ளை பூசணிக்காயில் 90% நீர்ச்சத்து உள்ளது. இது உடலின் நீரேற்றத்திற்கு ஒரு சிறந்த மூலமாக அமைகிறது. கூடுதலாக வெள்ளை பூசணிக்காயில் உள்ள வைட்டமின் பி3 உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க: கோடை வெயிலில் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் போதும்; உடலுக்கு பல நன்மைகள் காத்திருக்கு

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

சில ஆய்வுகள், வெள்ளை பூசணிக்காயில் காணப்படும் சேர்மங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகிறது. அவை உணவின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் மருத்துவரின் பிரிந்துரையுடன் தினமும் காலை உணவுக்கு முன் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

உடல் எடை கட்டுப்பாடு

வெள்ளை பூசணிக்காய் ஜூஸில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் எடையை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு இந்த ஜூஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். கலோரிகள் குறைவாக இருப்பதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. அதே போல் இதில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். காலை நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வோர் பயிற்சிகளை முடித்த பிறகு வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பது நல்லது.

யாரெல்லாம் வெள்ளை பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும்?

கர்ப்பிணிகள்

வெள்ளை பூசணி ஜூஸில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள கரு மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

வயதானவர்கள்

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல கலவையாக உள்ள வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் வயதானவர்களின் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது. இதன் மூலம் வயதானவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள்

உடற்பயிற்சிக்குப் பிறகு இழந்த ஆற்றலை நீர்ச்சத்து மூலம் மீட்டெடுக்க வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் உங்களுக்கு உதவும்.

உடல்நலன் விரும்பிகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்புபவர்கள் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிக்கலாம். இது உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க: கோடை காலத்தில் அதிகளவில் இளநீர் குடிப்பதால் ஏற்படும் 6 பக்க விளைவுகள்

white pumpkin juice recipe

வெள்ளை பூசணி ஜூஸ் செய்வது எப்படி?

  • தேவையான அளவு வெள்ளை பூசணி எடுத்து அதன் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • நறுக்கிய வெள்ளை பூசணிக்காயை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
  • அதன் பிறகு சல்லடையை பயன்படுத்தி வெள்ளை பூசணிக்காய் கூழை வடிகட்டி சாறு மட்டும் எடுக்கவும்.
  • சுவைக்கு தேவையென்றால் வெள்ளை பூசணி ஜூஸில் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கலாம்.
  • வெள்ளை பூசணி ஜூஸை அப்படியே குடிக்கலாம் அல்லது சில மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக குடிக்கலாம்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP