herzindagi
Betel nut benefits on skin

Kottai Pakku Benefits: கோடி நன்மைகளை கொட்டிக்கொடுக்கும் கொட்டை பாக்கு... தெரிந்தால் விடமாட்டீர்கள்!

வீட்டில் பயன்படுத்திக்கொண்டிருந்த மூலிகை சார்ந்த சில பொருட்களைக் காலப்போக்கில் மறந்து விட்டோம். அதில் ஒன்று கொட்டை பாக்கை சேர்த்து தாம்பூலம் சாப்பிடும் வழக்கம்
Editorial
Updated:- 2024-09-14, 21:10 IST

தாம்பூலம் சாப்பிடுவதில் முக்கியமான பொருட்களில் ஒன்று பாக்கு. இந்த கொட்டை பாக்கில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. பொதுவாக சித்த மருத்துவத்தில் கொட்டை பாக்குக்கென்று தனி இடம் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு கொட்டை பாக்கு ஆரோக்கியம் சார்ந்த அதிசயங்களை செய்கிறது. என்ன மாதிரியான நோய்களுக்கு கொட்டை பாக்கை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். 

கொட்டை பாக்கு எந்த நோய்களுக்கு பலன் தருகிறது 

kottai pakku inside

  • துவர்ப்பு சுவை கொண்ட கொட்டை பாக்கு கர்ப்ப பை தொடர்பான பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. 
  • கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் நபர்கள் கொட்டை பக்கை பயன்படுத்தலாம்.  இதில் இருக்கும் துவர்ப்பு தன்மை அதிகப்படியான கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. 
  • பிசிஓடி மற்றும் தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்கள், கொட்டை பாக்கு பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். 
  • அஜீர்ணம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் கொட்டை பாக்கை எடுத்து கொள்ளலாம். 
  • நெஞ்சில் சளி இருப்பவர்களுக்கு கொட்டை பாக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 
  • மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு தூங்கும் முன் வெற்றிலையில் பாக்கு சேர்த்து சிறிது சிறிதாக மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் நெஞ்சி சளி பிரச்சனைகள் தீரும். 
  • கொட்டை பாக்கை சூட்டு கருகி பொடி போல செய்து பல் துலக்கி வந்தால் பற்கள் சார்ந்த நோய்கள் வராது. 

கொட்டை பாக்கை வெற்றிலையுடன் சாப்பிடும் நன்மைகள் 

  • முன்னோர்கள் சொன்னது போல் தாம்பூலம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய. ஆனால் அவற்றை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • வெற்றிலை, கொட்டை பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடும்போது உடலுக்கு ஜீரண சத்தியை அதிகரிக்கும். 
  • சுண்ணாம்பில் கால்சியம் சத்து இருப்பதால் சுறிதலாவு சுண்ணாம்பு சேர்ப்பது உடலுக்கு போதுமான கால்சியம் தரக்கூடியது.
  • உணவுக்குப் பிறகு தாம்பூலம் சாப்பிடுவது மூன்று வேலையிலும் மாறுபடுகிறது. காலையில் வெற்றிலை அதிகமாக வைத்து எடுத்து கொள்ள வேண்டும், மதிய வேலையில் சுண்ணாம்பு அதிகம் வைத்துச் சாப்பிட்டால் உணவு நல்ல செரிமானமாகும், இரவு நேரத்தில் கொட்டை பாக்கு அதிகம் வைத்து சாப்பிட்டால் உடல் சீராக இருக்க உதவும். 

கொட்டை பாக்கு சாப்பிடும் முறை

kottai pakku new inside

  • வெற்றிலை, பாக்கு மற்றும்  சுண்ணாம்பு வைத்து சாப்பிடும் போது வரும் முதல் உமிழ்நீரை துப்பிட வேண்டும். இந்த நீரானது நஞ்சு என்று செல்லப்படுகிறது. அதேபோல் இரண்டாவது வரக்கூடிய நீரையும் துப்ப வேண்டும், மூன்றாவது நீரிலிருந்து விழுங்க வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை பெறலாம்.
  • கொட்டை பாக்கை பொடி செய்து சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளலாம். 
  • கொட்டை பாக்க்கை உடைத்து இரவு தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீருடன் சோம்பு, சீரகம் சேர்த்து கொதுக்க வைத்து குடித்து வரலாம். 

குழந்தைகளுக்குக் கொட்டை பாக்கு எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் 

  • குழந்தைகளுக்கு முகத்தில் ஏற்படும் தேமல், ஒல்லியாக இருக்கும் குழந்தைகள், வாந்தி குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு வயிற்றில் புழுக்கள் ஏற்படுவதுதான் காரணமாக இருக்கும். 
  • அதற்கு இரவு கொட்டை பாக்கை தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் 5 மிளகு, சிறிது சிரகம், கொஞ்சம் கடுக்கை தோல் மட்டும் சேர்த்துக் கொள்ளவும், சுக்கு, வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
  • இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை இந்து உப்பு சேர்க்கவும் 
  • இதனைச் சுண்டக்காய் அளவு எடுத்து குழந்தைகளுக்கு 5 நாட்கள் கொடுக்கலாம்.

எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன், நீங்கள் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]