குளிர்கால சூழல் நம்மை எளிதில் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வைத்துவிடும். சூடாக கிடைக்கிறதே என கண்ணில் காணும் பொருட்களை அனைத்தையும் சாப்பிடுவது திருப்தியை அளித்தாலும் குளிர்காலம் முடிவதற்குள் நீங்கள் அதிக எடையைப் பெறுவீர்கள். அதன் பிறகு எடை கூடி விட்டதே என கவலைப்படும் நாம் டயட் பின்பற்ற தொடங்குகிறோம். ஆனால் அனைவராலும் டயட்டை பின்பற்ற முடியாது. அதற்கு பதிலாக, அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் மற்றும் எடையைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான ஜூஸ்களை ஏன் முயற்சி செய்யக்கூடாது.
எடை இழப்புக்கான சிறந்த ஜூஸ்கள்
ஜூஸ் குடிப்பது எடை இழப்புக்கான ஒரு சிறந்த முறையாகும். எனினும் ஜூஸ் மட்டுமே குடித்து கொண்டிருந்தால் உடல் எடை குறையும் என உறுதியளிக்க முடியாது. தினசரி உணவு பழக்கத்தில் ஜூஸ்களை சேர்ப்பது எடை இழப்புக்கு நல்லதாகும். பொதுவாகவே ஜூஸ்கள் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் வளமான மூலமாகும்.
அவை உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் அதிக கலோரிகளை எரிக்க உதவும். ஜூஸ்கள் எடை இழப்புடன் சேர்த்து பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதனுடன் உங்களின் எடை இழப்பு இலக்குகளை அடைய ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
கேரட் ஜூஸ்
கேரட்டில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவை எடை இழப்புக்கான சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து நீங்கள் நீண்ட நேரம் முழுமையாக இருக்க உதவுகிறது. அதே நேரம் அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது. கேரட் ஜூஸ் பித்தத்தை சுரக்க உதவுகிறது. இதனால் உடலில் கொழுப்பு எரிக்கப்பட்டு எடை குறைகிறது. இந்த பயனுள்ள எடை இழப்பு ஜூஸை தயாரிக்க சறிதளவு இஞ்சி சேர்க்கவும். கேரட் ஜூஸின் முழு நன்மைகள் கிடைத்திட அதை குடிப்பதற்கு முன் ஜூஸ் வடிகட்டுவதைத் தவிர்க்கவும்.
மேலும் படிங்கKinnow Juice - கின்னோவ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
ஆப்பிள் ஜூஸ்
நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் ஆப்பிளை உங்கள் உணவு பழக்கத்தில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். ஆய்வுகளின்படி ஒரு கிராம் ஆப்பிளில் 50 கலோரிகள் உள்ளன. கலோரிகளைப் பற்றி கவலைப்படாமல் விரும்பும் அளவுக்கு நீங்கள் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம் என்பதை இந்த தகவல் உணர்த்துகிற. இரண்டு கப் நறுக்கிய ஆப்பிள், ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் கொண்டு ஆப்பிள் ஜூஸ் தயாரித்து பருகவும்
பீட்ரூட் ஜூஸ்
உங்களின் எடையைக் குறைக்கும் உணவு பழக்கத்தில் பீட்ரூட் ஒரு சிறந்த காய்கறியாகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டில் கொழுப்பு கிடையாது. எனவே நன்மை பயக்கும் பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை பராமரிக்க சிறந்தது. ஏனெனில் இது கரையக்கூடிய மற்றும் கரையாத உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும்.
இந்த ஜூஸின் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதன் சுவையை அதிகரிக்க சிறிது எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரகத்தை சேர்க்கலாம்.
மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸ் உங்கள் சருமத்தின் இயற்கையான பொலிவை அதிகரிப்பது மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் சில அமிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் கொழுப்பை எரிக்கவும், வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும் மாதுளை ஜூஸ் பசியை அடக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது எடை இழப்பு முயற்சிகளுக்கு உதவும்.
மேலும் படிங்கMorning Juices : வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஜூஸ்கள்
பாகற்காய் ஜூஸ்
கசப்பு சாறு என்றும் அழைக்கப்படும் பாகற்காய் ஜூஸ் பெரும்பாலானோரால் விரும்பப்படாத ஜூஸாக இருக்கலாம். ஆனால் இது எடை இழப்புக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும். பாகற்காய் ஜூஸின் நுகர்வு கல்லீரலில் பித்த அமில உற்பத்தியைத் தூண்டும். இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு அவசியம். மேலும் பாகற்காய் ஒரு குறைந்த கலோரி காய்கறியாகும்.
100 கிராமில் 17 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. அதனால் தான் பாகற்காய் ஜூஸ் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ள ஜூஸாக கருதப்படுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க இயற்கையான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால் பாகற்காய் ஜூஸை உங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்
அன்னாசி ஜூஸ்
அன்னாசி ஜூஸ் தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான மதிப்புமிக்க தீர்வாகக் கருதப்படுகிறது. இது புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும் பசியை அடக்கி கொழுப்புகளின் செரிமானத்திற்கு பயன்படுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation