தேநீர், காஃபி, சோடா அல்லது சர்க்கரை கலந்து பானங்கள் உங்கள் நாளைத் தொடங்குவதற்கான ஆரோக்கியமான வழி அல்ல. இவற்றை காலை எழுந்தவுடனேயே குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம். எழுந்தவுடனேயே இவற்றை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு நீங்கள் நினைத்து பார்த்திடாத அளவிற்கு அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் காலை உணவுக்கு முன்பாக அருந்தும் பானங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தேநீர், காஃபி, சோடா ஆகியவற்றுக்கு பதிலாக இந்த ஜூஸ்களை காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் அருந்தி மகிழலாம்.
கரேலா எனும் பாகற்காய் ஜூஸ் காலையில் குடிப்பதற்கு சிறந்த பானங்களில் ஒன்றாகும். பாகற்காய் ஜூஸில் இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே நிர்வகிக்க உதவும் கலவைகள் உள்ளன. பாகற்காய் ஜூஸில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் பாகற்காய் ஜூஸ் குடிக்கலாம்.
கிரீன் டீயில் நீரிழிவு மேலாண்மை உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் நன்மைகளை முழுமையாக பெற இனிப்புகள் எதையும் உடன் சேர்க்க கூடாது. ஏதாவது சேர்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் இலவங்கப்பட்டையை பயன்படுத்தவும். இது கிரீன் டீயின் சுவையை மட்டுமல்ல அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. கிரீன் டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய உடல்நல சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிங்க ABC Juice : ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்
பார்லி ஒரு 'சூப்பர் தானியம்' ஆகும். இதை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்லி கலந்த தண்ணீர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஏனெனில் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. பார்லி தண்ணீரில் உப்பு சேர்க்கலாம் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் உப்பு நுகர்வு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் படிங்க Maqui Berry Benefits : கேள்விப்படாத மாக்வி பெர்ரி பழத்தில் இத்தனை நன்மைகளா ?
நீரிழிவு நோயாளிகள் எலுமிச்சை ஜூஸை காலையில் குடிக்க வேண்டும் என பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நச்சு நீக்க பானமாகும். இது உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் மற்றும் எடை இழப்புக்கு உதவவும் கூடும். உங்களுக்கு கூடுதல் சுவை தேவைப்பட்டால் புதினா அல்லது இஞ்சி சேர்க்கலாம். ஆனால் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]