ஏபிசி ஜூஸ்… இது என்ன கேள்விப்படாத ஜூஸாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். A for Apple, B for Beetroot, C for carrot ஜூஸ்களை சுருக்கி ABC Juice என்று குறிப்பிட்டு இருக்கிறோம். இந்த ஜூஸ்கள் உங்களுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை தரும். ஏபிசி ஜூஸை வீட்டிலேயே எளிதில் தயாரித்து விடலாம்.
இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் உடலில் ஏராளமான ஊட்டச்சத்துகள் எளிதில் ஏற்றப்படும். உடல் ஆரோக்கியத்திற்காக பலர் தினமும் காலையில் ஒரு ஜூஸ் குடிக்கின்றனர். ஏராளமான ஜூஸ் வகைகள் இருந்தாலும் நாம் இரண்டு மூன்று ஜூஸ்களையே மீண்டும் மீண்டும் குடிக்கிறோம். எனவே நீங்கள் சரியான காம்போவை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த ஏபிசி ஜூஸ் சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
குளிர்காலம் என்றாலும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவை எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த ஜூஸ் உங்கள் ஆரோக்கியத்தின் தேர்வாக அமைந்திடும். இதைப் பற்றி சற்று விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
ஏபிசி ஜூஸ்
ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் பலவற்றின் நல்ல மூலமாகும். ஆப்பிள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை அதிகரிக்கவும் மற்றும் எடை இழப்புக்கும் உதவும்.
மேலும் படிங்கMaqui Berry Benefits : கேள்விப்படாத மாக்வி பெர்ரி பழத்தில் இத்தனை நன்மைகளா ?
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறைந்தபட்ச கலோரிகளுடன், பீட்ரூட் உங்களுக்கு ஃபோலேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் புரதத்தை வழங்க முடியும்.
கேரட்
கேரட் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ-வின் சிறந்த மூலமாகும். கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் பி6, பயோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன.
மேலும் படிங்கBenefits of Beans : அளவற்ற நன்மைகளை கொண்ட பீன்ஸ் காய்கறி
ஏபிசி ஜூஸின் நன்மைகள்
ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றில் தனித்தனியாகவே இவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கிறது என்றால் மூன்றையும் ஒரேநாளில் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி சிந்தித்து பாருங்கள்.
1. எடை இழப்பு
2. இதய ஆரோக்கியம் அதிகரிப்பு
3. உடலில் நச்சு நீக்கம்
4. கண் மற்றும் தோல் ஆரோக்கியம் மேம்பாடு
5. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பு
இந்த மூன்றும் குளிர்காலத்தில் எளிதாக கிடைக்கும். எனவே தாமதிக்காமல் ஏபிசி ஜூஸை பருகி மகிழ்வதோடு ஆரோக்கியமும் பெறுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation