Benefits of Beans : புரதம் நிறைந்த பீன்ஸ் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்

நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பீன்ஸில் உடல் ஆரோக்கியத்திற்கான நன்மைகள் உள்ளன. எனவே பீன்ஸை உணவு பழக்கத்தில் கட்டாயம் சேருங்கள்

One of legumes

இன்னைக்கு வீட்டில் என்ன பொரியல் என தாயிடம் கேட்கும் பிள்ளைகளுக்கு பீன்ஸ் பொரியல் என்று பதில் கிடைத்தால் அவ்வளவு தான்… முகம் மாறிவிடும். வேற பொரியலேயே கிடைக்கவில்லையா என கோபம் வரும். ஆனால் பீன்ஸில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

புரதம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் வைட்டமின்களின் தாவர ஆதாரம் என பீன்ஸை குறிப்பிடலாம். பீன்ஸ் ஒருவரின் இதயம், குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Kharif Crop

பீன்ஸில் உள்ள புரதம் நமது உடலைப் பராமரிப்பதிலும், உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸில் அமினோ அமிலங்கள், ஃபோலேட் உட்பட பல முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. ஃபோலேட் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பீன்ஸ் சாப்பிட்டால் கருவை சுமக்கும் நரம்பு குழாய்களில் குறைபாடுகள் இருந்தால் அது சரி செய்யப்படுகிறது.

சில ஆய்வுகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவர்களாக பீன்ஸ் செயல்படுவதை உறுதிபடுத்துகின்றன. இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும். நாம் பீன்ஸ் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து ஆரோக்கியமான வாழ்விற்கு வித்திடும்.

மேலும் படிங்க Drumstick Benefits - ரத்த சுத்திகரிப்புக்கு உதவிடும் முருங்கைக்காய்

பீன்ஸில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் வழக்கமான குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

கால்சியம், பாஸ்பேட் மற்றும் வைட்டமின் கே நிறைந்த பீன்ஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் அன்றாட உணவில் பீன்ஸை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பீன்ஸின் குறைந்த கலோரி எண்ணிக்கை எடை மேலாண்மைக்கும் பயனளிக்கிறது.

மேலும் படிங்கGreen Pea Benefits : பச்சை பட்டாணியின் ஆரோக்கிய நன்மைகள்

பீன்ஸில் இருக்கும் வைட்டமின் ஏ வயது மாகுலர் சிதைவைத் தடுக்கவும், நல்ல பார்வையைத் தக்கவைக்கவும் உதவுகிறது. பீன்ஸில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. எனவே நீங்கள் பிள்ளைகளுக்கு பீன்ஸின் நன்மைகளை எடுத்துரையுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP