மோரிங்கா என்று அழைக்கப்படும் முருங்கைக்காய் கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். நாம் அன்றாடம் குடிக்கும் பாலுடன் ஒப்பிடுகையில் முருங்கைக்காயில் இரண்டு மடங்கு புரதம் மற்றும் நான்கு மடங்கு கால்சியம் அதிகம் உள்ளது. இதன் இலைகள், விதைகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளவையாகும்.
குறிப்பாக வயிறு மற்றும் இருமல் நோய்களுக்கு முருங்கைக்காய் மிகவும் நன்மை பயக்கும். முருங்கையின் இலைகள் சுளுக்கு, கண் நோய்கள் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் தரும். பல நோய்களை குணப்படுத்த தேவையான ஊட்டச்சத்துகள் முருங்கைக்காயில் நிறைந்துள்ளன.
முருங்கைக்காயில் கால்சியம், வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி1, வைட்டமின்-பி2, வைட்டமின்-பி3, வைட்டமின்-பி5, வைட்டமின்-பி6, வைட்டமின்-பி9, வைட்டமின்-சி, பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்து, புரதம், சோடியம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற தனிமங்களும், சத்துகளும் அதிக அளவில் நிறைந்துள்ளன. முருங்கைக்காயில் கேரட்டை விட பத்து மடங்கு வைட்டமின் ஏ, ஆரஞ்சு பழத்தைவிட ஏழு மடங்கு வைட்டமின் சி, பாலை விட அதிக கால்சியம், சாதாரண கீரை விட 25 மடங்கு இரும்புச்சத்து உள்ளன.
எலும்புகளை வலுப்படுத்துவதில் முருங்கைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆராய்ச்சிகளின்படி முருங்கைக்காயில் கால்சியம் நிறைந்துள்ளது. ஒரு கிளாஸ் பாலில் உள்ள கால்சியத்தின் அளவை விட முருங்கைக் கீரையில் இருக்கும் கால்சியம் அதிகம். இதன் நுகர்வு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். முருங்கைக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுபெறும்.
மேலும் படிங்க Green Pea Benefits : பச்சை பட்டாணியின் ஆரோக்கிய நன்மைகள்
முருங்கைக்காயை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலன்களை தரும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. இதைத் தவிர முருங்கைக்காய் பித்தப்பை செயல்பாட்டை அதிகரித்து. இதனால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். முருங்கைக்காயை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை நோயாளிகளால் உணர முடியும்.
முருங்கை இலைகள் இரத்த சுத்திகரிப்புக்கு மிகவும் உகந்ததாகும். முருங்கை இலையில் உள்ள சத்து வலுவான நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. முருங்கை சாறு குடித்து பாருங்கள்… அப்போது தெரியும் இது உடலுக்கு எவ்வளவு நன்மை தருகிறது என்று. இதனை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்கள் மற்றும் வறட்சியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் படிங்க் Cut Down Sugar - உணவில் சர்க்கரை பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?
முருங்கைக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது.முருங்கைக்காய் குடலைச் சுத்தம் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கூறுகள் ஏராளமாக இருப்பதால் வயிறு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்த காய்கறியாகும்.
இதனாலேயே முருங்கையை ஒரு சூப்பர் உணவு என்று சொல்லலாம். இது உங்களை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]