மாக்வி பெர்ரி தாவரவியல் ரீதியாக அரிஸ்டோடெலியா சிலென்சிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு கவர்ச்சியான அடந்த ஊதா நிறத்தில் இருக்கும் பழமாகும். மாக்வி பெர்ரி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை ஒரு சூப்பர் ஃப்ரூட் என்று அழைக்கலாம். மாக்வி பெர்ரி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இந்த பழம் குடல் மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மாக்வி பெர்ரியில் ஆன்டிஆஸ்கிடன்ட்கள் நிரம்பி இருக்கின்றன.
மாக்வி பெர்ரி பழம் மற்றும் அதில் உள்ள சாறுகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இதில் இருக்கும் ஆந்தோசயினின்கள் (anthocyanins) சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை மாக்வி பெர்ரி பழம் நடுநிலையாக்க உதவுகிறது. இந்த பழம் வீக்கம் ஏற்பட்டால் அதை குறைக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் பங்களிக்கும்.
மாக்வி பெர்ரிகளின் நுகர்வு இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். இந்த பழத்தின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய செயல்பாட்டை ஆதரித்து இதயத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைப்பதிலும் பங்கு வகிக்கிறது.
மாக்வி பெர்ரிகளின் ஆற்றல் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணியான இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிப்பதிலும் மாக்வி பெர்ரி உதவக்கூடும்.
மேலும் படிங்க Benefits of Beans : அளவற்ற நன்மைகளை கொண்ட பீன்ஸ் காய்கறி
கீல்வாதம் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்து மாக்வி பெர்ரி போராடுகிறது. மாக்வி பெர்ரியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. இந்த பழம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது.
இந்த சூப்பர் ஃப்ரூட்டில் உள்ள அந்தோசயினின்கள் கண்பார்வையை பராமரிக்கவும் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. மாக்வி பெர்ரிகளின் நன்மைகளைத் கிடைக்க அவற்றை உணவுப் பழக்கத்தில் மிகவும் எளிதானதே.
மேலும் படிங்க Drumstick Benefits - ரத்த சுத்திகரிப்புக்கு உதவிடும் முருங்கைக்காய்
மாக்வி பெர்ரி டீ தயாரிப்பது எப்படி?
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]