கின்னோவ் அல்லது கினூ பழம் இந்தியாவின் வட மாநிலங்களில் குளிர்காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் பழங்களில் ஒன்றாகும். இது பார்பதற்கு ஆரஞ்சு பழம் போலவே இருக்கும். கின்னோவ் பழத்திற்கும் ஆரஞ்சிற்கும் ஒற்றுமைகளும் வித்தியாசங்களும் உள்ளன.
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த இந்த சுவையான குளிர்காலப் பழம் உங்கள் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை உணவுப் பழக்கத்தில் சேர்த்து அதன் பலன்களை அனுபவிக்க சிறந்த வழிகளில் ஒன்று கின்னோவ் ஜூஸ் குடிப்பதாகும்.
கின்னோவில் குளுக்கோஸ் நிரம்பியுள்ளது. இது உடலுக்குச் சிறந்த ஆற்றல் மூலமாகும். ஒரு கிளாஸ் கின்னோவ் ஜூஸுடன் காலையைத் தொடங்குவது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கின்னோவை உட்கொள்வது நம் உடலை உற்சாகப்படுத்தும். குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளிட்ட பெரிய அளவிலான கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலோ அல்லது பரபரப்பான வேலை வாழ்க்கையில் இருந்தாலோ உடற்பயிற்சிக்குப் பின் கின்னோவ் ஜூஸை பருகுங்கள்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கின்னோக்கள் கெட்ட கொழுப்பின் இருப்பையும் விளைவுகளையும் குறைக்கும் மற்றும் நம் உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. அதாவது, தினமும் கினோவை உட்கொள்வதால், பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம்.
மேலும் படிங்க இதய நோய் அபாயத்தை குறைக்கும் புளூபெர்ரி பழங்கள்
கின்னோவ் பழம் செரிமான மண்டலத்தில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே நீங்கள் அஜீரண பிரச்சினைகள் இருந்தால் பால் குடிப்பதைத் தவிர்த்துக் காலை உணவு பழக்கத்தில் கின்னோவ் ஜூஸை பருகலாம். சிறந்த முடிவுகள் கிடைப்பதற்கு தினமும் இரண்டு கின்னோவ் பழம் சாப்பிடலாம்.
நீங்கள் அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் கின்னோவ் உங்களுக்கான சிறந்த பழமாகும். கின்னோவில் கனிம உப்புகள் நிறைந்துள்ளன. எனவே அவை அமிலத்தன்மையைத் தணிக்கும்.
கின்னோவில் வைட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. வைட்டமின் சி வயதானதை தடுக்கும் முகவராக செயல்படுகிறது. கின்னோவை சாப்பிடுவது அல்லது கின்னோவ் ஜூஸ் தவறாமல் குடிப்பது வயதானதால் ஏற்படும் சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவும். மேலும் கினோவில் உள்ள தாதுக்கள் நமது ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குறைபாடற்ற மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறவும் உதவுகிறது.
மேலும் படிங்க தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் மருத்துவமனை செல்ல தேவையில்லை!
கின்னோவ் பழம் ஒரு பயனுள்ள விஷ எதிர்ப்பு என்று நம்பப்படுகிறது. கின்னோவ் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள அனைத்து நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்படும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]