
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளும் பழங்களில் வாழைப்பழம் முதலிடம் வகிக்கிறது. இதற்கான காரணம் வாழைப்பழம் அனைத்து மாதங்களிலும் கிடைக்கும், அதே நேரம் மலிவானதும் கூட. இது மியூசேசி குடும்பத்தை சேர்ந்தது. பொதுவாக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதை பச்சையாகவும் பழுத்த பழமாகவும் உட்கொள்ளலாம்.
உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க ஆப்பிளை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துவார்கள். அதேபோல வாழைப்பழமும் ஆப்பிளைப் போலவே ஊட்டமளிக்கிறது. எனவே வாழைப்பழத்தை கட்டாயம் உணவில் சேர்க்கவும். இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.

வாழைப்பழத்தில் உள்ள இருவிதமான நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தும். இரைப்பையில் தொந்தரவு ஏற்படுத்தும் பாக்டீரியா போன்ற கிருமிகளுக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்குகிறது.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு வாழைப்பழங்களை உட்கொள்வது உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவும், மேலும் அதிக வேலை செய்யவும் அனுமதிக்கும்.
மேலும் படிங்க உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தர்பூசணி விதைகள்
பழுக்காத வாழைப்பழங்கள் சாப்பிட்டால் அது உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணரவைக்கும். இதில் ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் எனப்படும் குறிப்பிட்ட மாவுச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் பசியை அடக்கி, உங்களை முழுதாக உணர உதவுகிறது.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. வாழைப்பழத்தை வாரத்திற்கு ஆறு முறை சாப்பிடுபவர்களை காட்டிலும் சாப்பிடாதவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்பு 50 விழுக்காடு குறைவாக இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, லுடீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. லுடீன் என்பது மாகுலர் சிதைவு அபாயத்தைக் குறைக்க உதவும் ஒரு ஊட்டச்சத்து ஆகும்.
மேலும் படிங்க Drumstick Benefits - ரத்த சுத்திகரிப்புக்கு உதவிடும் முருங்கைக்காய்
பற்களை வெண்மையாக்க வாழைப்பழத்தோல் மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத் தோலின் உட்புறப் பகுதியை சுமார் 2 நிமிடங்களுக்கு மெதுவாகத் தேய்த்தால் பற்கள் வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]