herzindagi
dal health benefits

Dal benefits: பருப்பு வகைகளில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

நாம் தினமும் உணவில் சேர்த்து சாப்பிடும் பருப்பு வகைகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம் 
Editorial
Updated:- 2024-03-30, 09:31 IST

நம் அன்றாட ம் சமையலில் பல விதமான பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்கிறோம் ஆனால் அவற்றில் எந்த பருப்பு சிறந்தது என்று சந்தேகம் அனைவருக்கும் பொதுவாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம் சமையலறையில் பருப்பு இல்லாமல் சமையல் நடக்கவே நடக்காது. ஏனென்றால் வாரம் ஒரு முறையாவது நம் வீட்டில் சாம்பார் வைப்பது வழக்கம். இதனால் எப்போதும் நம் வீட்டில் பருப்பு இருந்து கொண்டே இருக்கும். பருப்பு வகைகள் குறித்தும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

துவரம் பருப்பு:

thuvaram paruppu

துவரம் பருப்பு சாப்பிடுவதினால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.   

உடல் எடை அதிகரிக்கும்:

ஒரு சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் அல்லது என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது அவர்களை பொதுவாகவே சிலர் பார்த்து உடல் நிலையை நலம் விசாரிப்பார்கள் இதன் காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை எளிதில் அதிகரிக்க வாரம் ஒரு முறை துவரம் பருப்பை பசு வெண்ணெய் விட்டு நன்கு வதக்கி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் சதை பிடிப்பு உண்டாகும். மேலும் இது உடலுக்கு வலிமை அளிக்க உதவுகிறது.

ரத்த ஓட்டம் சீராகும்:

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. துவரம் பருப்பில் அதிக பொட்டாசியம் சத்து உள்ளதால் இதனை சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும். எனவே துவரம் பருப்பை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

நோய் எதிர்ப்பு சக்தி:

ஒரு சிலருக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். நம் உடலை எந்த நோயும் அணுக கூடாது என்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். துவரம் பருப்பில் உள்ள வைட்டமின் சி நம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க: சிறந்த காலை உணவுக்கு இந்த பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்!

கடலை பருப்பு:

kadalai paruppu

துவரம் பருப்பை போலவே நாம் அன்றாடம் சமையல் பயன்படுத்தும் ஒரு பருப்பு வகை கடலைப்பருப்பு. இந்த கடலைப்பருப்பை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். 

சரும பாதுகாப்பு:

கடலைப்பருப்பை உணவில் சேர்த்து அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோல் நோய்கள் ஏதும் வராது என்று கூறப்படுகிறது.  மேலும் இது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். அதேபோல சொறி சிரங்கு படை போன்ற தோல் நோய்களிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

வயது வித்தியாசம் இன்றி நம்மில் பலருக்கும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் வர தொடங்கிவிட்டது. கடலைப்பருப்பில் உள்ள பொட்டாசியம் நார்ச்சத்து குறைந்த அளவு கொழுப்பு சத்து இதை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கும் கடலை பருப்பில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு சேருவதை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. 

பாசிப்பருப்பு:

pasi parupu

சுவையான பாசிப்பருப்பை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

காய்ச்சலுக்கு மருந்து:

பெரியம்மை, சின்னம்மை தாக்கியவர்கள் பாசிப்பருப்பை ஊற வைத்த அந்த தண்ணீரை குடித்து வரலாம். அதேபோல காலரா மலேரியா டைபாய்டு போன்ற காய்ச்சலுக்கும் பாசிப்பருப்பு சிறந்த மருந்தாகும். 

நினைவாற்றல் அதிகரிக்கும்:

நினைவுத்திறன் குறைந்து கொண்டே வருபவர்கள் வாரம் ஒரு முறை பாசிப்பருப்பை மசியல் செய்த சாப்பிட்டு வரலாம் அதேபோல பாசிப்பருப்பை வல்லாரைக் கீரையுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால் நினைவுத்திறன் அதிகரிக்க உதவும். 

மேலும் படிக்க: ஸ்ட்ராபெரி பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

சரும அழகு: 

சோப்பிற்கு பதிலாக குளிக்கும் போது பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் அழகாகவும் மாறும். மேலும் பொடுகு தொல்லை உள்ளவர்கள் தலைமுடியில் பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் பொடுகு குறையும்.

Image source: google

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]