பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் ஸ்ட்ராபெர்ரி. இது பெர்ரி வகை பழங்களில் ஒன்று. இந்த பழம் அதிக சுவை மட்டுமல்லாமல் நல்ல மனமும் கொண்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் வைட்டமின் சி, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அயோடின் போன்ற உடலுக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழம் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் ஸ்ட்ராபெரி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் புற்றுநோயை எதிர்த்து போராடும் ஆற்றல் அவர்களிடம் அதிகம் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. நமது உடலில் சேரும் பல வகையான நச்சுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும் புற்றுநோய் ஏற்படுவது இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிட்டு வந்தால் இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்க கூடிய வைட்டமின்கள் அதிகளவு நிறைந்துள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் ஸ்ட்ராபெரி பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலையில் ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை எளிதில் சீக்கிரம் குறையும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இனிப்பு உருளைக்கிழங்கின் 10 ஆரோக்கிய நன்மைகள்!
ஸ்ட்ராபெரியில் உள்ள கால்சியம் சத்து நம் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நம் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க நம் தினசரி உணவில் கொழுப்பு சத்துக்கள் குறைந்த, நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெரி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கும் குறிப்பாக நம் கண் பார்வைக்கும் நல்லது. நம் கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள சத்துக்கள் ஊக்கப்படுத்துகிறது. இதனால் வயது முதிர்ச்சி அடைந்தாலும் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
பெரும்பாலான பெண்களுக்கு வயது முதிர்ச்சி அடையும் போது அவர்களின் தோல் கடினமாக மாறும். மேலும் சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து சுருக்கங்கள் ஏற்படும். இந்த ஸ்ட்ராபெரி பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரித்து இளமை தோற்றத்தை நீடிக்க உதவும்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் அதிக நேரம் கணினியில் வேலை செய்வதால் அதன் வெப்ப அலைகள் பாதித்து தலைமுடி கொட்டுதல், இளநரை, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து தலைமுடி உதிர்வதை தடுக்க உதவும்.
ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இதை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் மற்றும் வயிறு கோளாறு பிரச்சனைகள் நீங்கும். மேலும் இது உணவு செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் குடல்களில் ஏற்படும் நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]