வைட்டமின் ஈ என்பது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்தை போதுமான அளவு உட்கொள்வது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் தோல் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் வைட்டமின் ஈ பராமரிக்கிறது.
கர்ப்பிணிகள் உட்பட பெரியவர்களுக்கு தினமும் 15 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. அதேநேரம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தினமும் 19 மில்லி கிராம் வைட்டமின் தேவைப்படுகிறது.
வைட்டமின் ஈ இயற்கையாக 8 வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. விதைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் சில கடல் உணவுகள் போன்ற ஏராளமான உணவுகளில் வைட்டமின் ஈ உள்ளது. வைட்டமின் ஈ கிடைக்கும் சிறந்த ஆதாரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
சூரியகாந்தி விதை வைட்டமின் ஈ, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஆதாரமாகும். சூரியகாந்தி விதைகள் உங்கள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.
அவகேடோ பழம் வைட்டமின் ஈ கிடைத்திடும் சுவைமிக்க ஆதாரங்களில் ஒன்றாகும். ஒரு அவகேடோ பழத்தில் 20 விழுக்காடு வைட்டமின் ஈ உள்ளது.
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்பு போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களில் கீரை முதன்மை வகிக்கிறது. அரை கப் பச்சைக் கீரையில் 16 விழுக்காடு வைட்டமின் ஈ கிடைக்கும். கீரையை வேகவைத்தோஅல்லது சாலட்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இதில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் அதிகம் உள்ளது. புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கும் உணவுகளில் ப்ரோக்கோலியும் ஒன்றாகும். ப்ரோக்கோலி சூப் அல்லது காலிபிளவர் போல் வறுத்து ப்ரோக்கோலியை சாப்பிடலாம்
பாதாம் உங்களுக்கு அதிக அளவு வைட்டமின் ஈ கிடைக்க உதவிடும். நீங்கள் வறுத்த பாதாமை சிற்றுண்டியாக சாப்பிடலாம் அல்லது நேரடியாக பாதாம் பால் குடிக்கலாம்.
வேர்க்கடலை ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான மூலமாகும். வேர்க்கடலையில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு வைட்டமின் ஈ உள்ளது. வறுத்த வேர்க்கடலையை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
ஹேசல்நட்ஸ் வைட்டமின் ஈ-ன் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதங்கள் மற்றும் ஃபோலேட் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஹேசல்நட்ஸை அப்படியே சாப்பிடலாம் அல்லது குக்கீஸூடன் சேர்க்கலாம்.
சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற காய்கறி எண்ணெய்கள் வைட்டமின் ஈ-ன் சிறந்த ஆதாரங்களாகும். சிறந்த பலன்களை பெற காய்கறி எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தலாம்.
மேலும் படிங்க குளிர்காலத்தில் தேன் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்
100 கிராம் மாம்பழம் சாப்பிடுவது தினசரி தேவையான வைட்டமின் ஈ உட்கொள்ளலில் ஆறு விழுக்காடு வரை வழங்குகிறது.
ப்ளாக்பெர்ரிகள், குருதிநெல்லிகள் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ- ன் சிறந்த ஆதாரங்களாகும். இவை உங்கள் அன்றாட உணவில் நிறத்தையும் சுவையையும் கொண்டு வரும்.
ப்ரோக்கோலி பெரும்பாலும் உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது குறைந்த கலோரி மதிப்பைக் கொண்டது. ஆனால் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியது. ஒவ்வொரு 100 கிராமிலும் தினசரி தேவைப்படும் அளவில் 10 விழுக்காடு வரை பங்களித்து உடலில் வைட்டமின் ஈ அளவை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் படிங்க Benefits of Turmeric Milk : ஆரோக்கியத்திற்கான அதிசய பானம்... மஞ்சள் பால்!
வைட்டமின் ஈ சருமத்தில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும். வைட்டமின் ஈ உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். சருமம் ஈரப்பத மூட்டப்படுவதால் அது மேலும் பளபளப்பாகும். சுருக்கங்களு குறையும். இது தோல் அரிப்பு மற்றும் தோல் வறட்சி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. சில ஆய்வுகள் வைட்டமின் ஈ தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் கூறுகின்றன.
வைட்டமின் ஈ சப்ளிமெண்ட் வயது தொடர்பான கண் பாதிப்புகளைக் குறைத்து கண் பார்வையை மேம்படுத்துகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் ஈ கண்புரையின் வளர்ச்சியைக் தடுக்கிறது.
வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வயது அதிகரிக்கும் போது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஈ உங்கள் உடலை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]