ப்ரூன்ஸ் என்று அழைக்கப்படும் உலர்ந்த பிளம்ஸ் ஊட்டச்சத்துகளின் அற்புதமாகும். உலர்ந்த பிளம்ஸின் சுவை மற்றும் அதிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள், நாச்சத்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. எனவே உணவுப் பழக்கத்தில் இந்த உலர்ந்த பிளம்ஸை சேர்ப்பதன் மூலம் அற்புதமான நன்மைகளுக்குப் பயனாளி ஆகிவிடுகிறீர்கள்.
கொடிமுந்திரியில் அதிக கலோரிகள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஐந்து முதல் பத்து உலர்ந்த கொடிமுந்திரிகளை சாப்பிடுவது அதே அளவு அல்லது அதற்கும் மேற்பட்ட புதிய பிளம்ஸை சாப்பிட்டு ஈடுகட்டுவதை விட எளிதாக இருக்கும்.
கொடிமுந்திரியில் நிறைய நார்ச்சத்து உள்ளது. எனவே இதனை உங்கள் தினசரி வழக்கத்தில் மெதுவாக சேர்க்கத் தொடங்கலாம். நீங்கள் ஏற்கனவே அதிக நார்ச்சத்து கொண்ட உணவை சாப்பிடாமல் இருந்து திடீரென ஒரே நேரத்தில் அதிக நார்ச்சத்து சேர்ப்பதும் தசைப்பிடிப்பு, வீக்கம் அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
தமிழில் கொடிமுந்திரி ( கருப்பு திராட்சை ) என்றழைப்படும் ப்ரூன்ஸ் பழம் ஃபைபர் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றது. இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. மலச்சிக்கலை சமாளித்து வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது என கூறலாம்.
கொடிமுந்திரி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இந்த பழம் இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் கொடிமுந்திரி இரத்த சர்க்கரையை நிர்வகிக்க விரும்பும் நபர்களுக்குப் பொருத்தமான தேர்வாக அமைகிறது.
மேலும் படிங்க Maqui Berry Benefits : கேள்விப்படாத மாக்வி பெர்ரி பழத்தில் இத்தனை நன்மைகளா ?
கொடிமுந்திரியில் உள்ள வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த உறைதல் மற்றும் எலும்பு வளர்சிதை மாற்றம் ஆகிய இரண்டிலும் ஈடுபட்டுள்ள வைட்டமின் கே வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க உதவுகிறது. உணவு பழக்கத்தில் கொடிமுந்திரியை சேர்த்துக்கொள்வது எலும்பு அமைப்பை வலுப்படுத்த உதவும்.
மேலும் படிங்க Green Pea Benefits : பச்சை பட்டாணியின் ஆரோக்கிய நன்மைகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கொடிமுந்திரி கருவியாக இருக்கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொடிமுந்திரியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் ஒருங்கிணைந்த விளைவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் பங்களிக்கின்றன.
கொடி முந்திரி ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளன.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]