rice for weight loss : அரிசி உணவுகள் எடை இழப்புக்கு உதவுமா?

அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

 
is rice good for weight loss tip

எடை இழப்பு பற்றி பேசுகையில், கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை பற்றி விவாதிக்காமல் இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவுகள் கலோரிகளின் அடிப்படையிலும் மற்றும் அவை உடலுக்கு ஏற்படுத்தும் விளைவுகளின் அடிப்படையிலும் வெவ்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. இதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட உணவுகளில் அரிசியும் ஒன்று. காலம் காலமாக முக்கிய உணவாக இருந்து வரும் அரிசி எப்படி தவிர்க்க வேண்டிய உணவாக மாறும்?

அரிசி சார்ந்த உணவுகளை தவிர்க்கும் படி பலரும் பரிந்துரை செய்கின்றனர். இந்நிலையில் அரிசியைப் பற்றி தவறாக சொல்லப்படும் பொய்களை உடைத்து, அவை எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வது சிறந்தது. இதை பற்றிய தகவல்களை சுகாதார ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளருமான கரிஷ்மா ஷா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

நிபுணர் கருத்து

rice weight loss

அரிசி மிகவும் பழமையான தானியம். இது பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களில் முக்கிய உணவாக இருந்து வருகிறது. இன்றளவும் பெரும்பாலும் அரிசி சார்ந்த உணவுகளையே வீடுகளில் சமைக்கிறோம். ஆனால் அரிசி சார்ந்த உணவுகளை சாப்பிடுவதால் எடை கூடுகிறது என்று பலரும் நம்புகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை தடுக்க அரிசி சார்ந்த உணவுகளை தவிர்க்கின்றனர். இந்த கருத்தை உடைத்து, எடை இழப்புக்கு அரிசி எவ்வாறு உதவுகிறது என்பதை கரிஷ்மா அவர்கள் விவரித்துள்ளார்.

எடை இழப்புக்கு அரிசி எவ்வாறு உதவுகிறது?

rice weight loss

  • அரிசியில் கொழுப்பை உடைக்க உதவும் அமினோ அமிலங்கள் உள்ளன.
  • அரிசியை ஊறவைத்து சமைக்கும் பொழுது, அது வைட்டமின் B சத்துக்களை அதிகமாக உருவாக்குகிறது. வைட்டமின் B வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமானவை, மேலும் வீக்கம், மாதவிடாய் முன் இருகக்கூடிய அறிகுறிகள்(PMS) மற்றும் மனநிலை மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது.
  • அரிசி சார்ந்த உணவுகளை சாப்பிடுவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி தொப்பை கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் உடல் எடை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இந்நிலையில் சீரான ஹார்மோன்கள் உங்கள் உடல் எடையை பராமரிப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • இது லெப்டின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வயிறு நிரம்பிய உடன் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அரிசி சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ள முடியாது. எனவே அதிகமாக சாப்பிடுவதால் எடை கூடும் அபாயம் இதில் இல்லை.
  • அரிசி ப்ரீபயாடிக் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ப்ரீபயாடிக் உணவுகள் நல்ல குடல் பாக்டீரியாக்களின் அளவு மற்றும் வடிவத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?

அரிசியை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?

rice weight loss

  • நம் முன்னோர்கள் உண்ணும் ஞானம் மிகவும் அற்புதமானது. பாரம்பரிய மற்றும் கலாச்சார வகை உணவுகள் மூலம் அரிசியை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இட்லி, தோசை, கொழுக்கட்டை அல்லது கிச்சடி போன்ற உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.
  • அரிசியின் வகையை தேர்வு செய்யும் பொழுது ஒரு சில விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள். பாலிஷ் செய்யப்படாத அரசியை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும். இவற்றை கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வை உங்களுக்கு கொடுக்கும். இது உடல் எடையை பராமரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • எப்போதும் சாதம் சாப்பிடும் பொழுது பருப்பு, காய்கறிகள் போன்றவற்றையும் சம அளவு எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் பொறியைக் கொண்டு சிற்றுண்டிகள் தயார் செய்த சாப்பிடலாம். இதில் அதிகம் எண்ணெய் மற்றும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டாம். இது போன்ற அரிசி வகை சிற்றுண்டிகள் உங்கள் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
  • இனி அரிசி சார்ந்த உணவுகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அரிசியின் தரம், தயாரிக்கும் முறை மற்றும் எடுத்துக்கொள்ளும் அளவுகளில் கவனமாக இருக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க பச்சைப் பயிரை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP