இதில் இரண்டு நிறங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று மஞ்சள், மற்றொன்று பச்சை. மிக சிறந்த சைவ வகை உணவாக மட்டுமல்லாமல் அதிகளவில் புரதச்சத்து மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த புரதச்சத்து நம் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதச்சத்து நம் உடலில் உள்ள திசுக்களை உருவாக்கவும், சீர்படுத்தவும் செய்கிறது. அதே சமயம் நம் தசைகள், எலும்புகள், இரத்தம் மற்றும் தோல் ஆகியவற்றை செயலாக்குகிறது.
இதுவும் உதவலாம்:1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
100 கிராம் வேக வைத்த பாசிப்பயரில் நமக்கு 6 கிராம் புரதத்தை தருகிறது. இதில் வைட்டமின் E, C மற்றும் K சத்துகள் நிறைந்து உள்ளது. உங்கள் குடலை பலமாக மாற்றும். மிகவும் லேசான தன்மை கொண்டது என்பதால் எளிதில் ஜீரணம் ஆகும். மற்ற பருப்புகளை காட்டிலும் இதில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதனால் ஆரோக்கியத்திற்கான ஒரு நல்ல தேர்வு என்று சொல்லலாம்.
பல்வேறு சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் காணப்படுகின்றன. நம் உடலால் செலினியம் மற்றும் அவசியமான அமினோ அமிலங்களை தானாக உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் பச்சை பயறு என்று சொல்லக்கூடிய பாசிப் பயரில் இவை அனைத்தும் அதிகமாக உள்ளது. எனவே பச்சை பயறு உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு கப் வேக வைத்த பாசிப்பருப்பில் நிறைந்திருக்கும் சத்துகளின் அளவுகள்:
கோலேசிஸ்டோகினின் எனப்படும் ஹார்மோன் செயலை அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக உணவு சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இது உங்களை அதிகமாக சாப்பிட விடாது, உங்கள் எடையும் அதிகமாகாது. பச்சை பயறில் அதிகமான நார்ச்சத்து இருக்கிறது. இந்த காரணத்திற்காகவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்கு செரிமானம் ஆகக்கூடிய புரதச்சத்து உள்ளது மற்றும் இதில் அதிக கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் தேவையான கொழுப்பு சத்துக்கள் உள்ளன. எக்கச்சக்கமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பலன்கள் கிடைக்கும். நாம் இப்போது அதை பற்றி பார்க்கலாம்
பச்சை பயிறு இரத்தத்தில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் தமனிகள் மற்றும் நரம்புகளை மென்மையாக்குகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
பச்சை பயறு நம் உடலின் சக்தியை சமன்பாட்டில் வைக்கிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
பச்சை பயரில் வைட்டமின் B சத்து உள்ளது. வைட்டமின் B6 நிறைந்த உணவுகளை உண்பதால் , பாக்டீரியா மற்றும் நோய் உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உடலுக்கு சக்தி கிடைக்கும். நம் செல்களை ஃப்ரீ ராடிகல்ஸ் இடம் இருந்து பாதுகாக்கும்
ஒரு கப் பாசிப்பருப்பில் 15.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் பெக்டின் எனப்படும் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது குடலுக்கு மிகவும் தேவையானது. எனவே குடல் அசைவுகளை மேம்படுத்தும். இதனால் செரிமான மண்டலத்தில் உணவு வேகமாக நகரும்.
இதை பல விதமான முறைகளில் நாம் உட்கொள்ளலாம். சாலட், சூப், மற்றும் காய்களுடன் சேர்த்து சாப்பிடலாம். டெசர்ட்ஸ் மற்றும் இனிப்புகளும் பச்சை பயிறு வைத்து செய்யலாம்.
இவற்றை வேக வைத்து சாப்பிடலாம் அல்லது முளைகட்டியும், பச்சையாகவும், வேகவைத்தும் சாப்பிடலாம். தினமும் 1 கப் சாப்பிட்டால், நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தில் 40.5 மற்றும் 71 % வரை நமக்கு கிடைத்து விடும்.
இதுவும் உதவலாம்:காலை உணவுடன் ஆளி விதைகளை சேர்த்து கொள்ள மூன்று வழிகள்
குறிப்பு :பாதி வேக வைத்த பாசிப்பயிர் தலைசுற்றல், வயிற்று போக்கு மற்றும் குமட்டலை உண்டாக்கும். நாம் அளவோடு எடுத்து கொண்டால் எல்லா உணவும் நன்மை தரும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் தான் பாசிப் பயிறு பயன்களை தருகிறது. ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து வயிற்றுக்கு உபாதையை தரும். உங்களுக்கு உப்பு நீர் பிரச்சினை இருந்தால், மருத்துவர் ஆலோசனைப் பெற்ற பிறகு பாசிப்பருப்பை சாப்பிடலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]