Flax seeds Benefits In Tamil: காலை உணவுடன் ஆளி விதைகளை சேர்த்து கொள்ள மூன்று வழிகள்

ஆளி விதைகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

 
flax seeds uses

உங்களுக்கு தெரியுமா? ஆளி விதைகள் உலகத்தின் பழைமை வாய்ந்த தானியங்களில் ஒன்றாகும். இதில் எக்கச்சக்கமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டங்கள் இருப்பதால் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர், இந்த சிறு விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால் நம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாத்து ஊட்டமளிக்கிறது.

ஆளி விதைகள் உங்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய செரிமான பிரச்சனை, சீரற்ற இரத்த சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகியவற்றிற்கு தீர்வு தருகிறது. இந்த பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆளி விதைகளின் முழு பலன்களையும் பெற்று, உங்களுக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆளிவிதை ஓட்ஸ் உணவு

நீங்கள் காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸை சாப்பிட விருப்பம் காட்டினால் உங்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பொருந்தும், முயற்சி செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் - 1/2 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • தேன் - சுவைக்கேற்ப
  • பால் - 1/ 4 கப் அல்லது தேவைகேற்ப
  • ஆளி விதை - 1 ஸ்பூன்
  • உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் (தேவைப்பட்டால்)

செய்முறை

  • ஒரு கடாயில் தண்ணீர், ஆளி விதைகள் மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
  • நன்கு வெந்தவுடன் சுவைக்கு ஏற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்க்கவும்.
  • கடைசியாக பால் ஊற்றி தீயை அணைக்கவும்.
  • உங்களுக்கு விருப்பமான உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து சாப்பிடலாம்

ஆளி விதை பழ சாலட்

flax seeds benefits in tamil

  • ஆரோக்கியமாக தொடங்க காலையில் ஒரு பவுல் பழங்கள் சாப்பிடுவது சிறந்த விஷயம்.

தேவையான பொருட்கள்

  • விருப்பமான பழங்கள்
  • நட்ஸ் மற்றும் விதைகள்
  • கருப்பு உப்பு
  • ஆளி விதை - 1 ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில், விருப்பமான அனைத்து நறுக்கிய பழங்களையும் சேர்க்கலாம் (மாதுளை, ஆப்பிள், அன்னாசி, முலாம்பழம், வாழைப்பழம், திராட்சை, கிவி போன்ற பழங்களை எடுக்கவும்).
  • சிறிது கருப்பு உப்பு மற்றும் தேவை பட்டால் சிறிது பழச்சாறு கலந்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
  • பின்பு 1 ஸ்பூன் ஆளி விதைகளை மேலே தூவி விடவும்.சுவையான ஆரோக்கியமான பழ சாலட் தயார்.

ஆளிவிதை சப்பாத்தி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - 1/2 கப்
  • சீரகம் -1/2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • ஆளி விதைகள் - 3 டீஸ்பூன்
  • ஓட்ஸ் - 1/2 கப்
  • நெய் - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
flax seeds benefits in tamil

செய்முறை

  • ஒரு ஜாரில், ஆளி விதைகள் மற்றும் ஓட்ஸை தூள் செய்து கொள்ளவும்.
  • ஒரு பெரிய கிண்ணத்தில், கோதுமை மாவு, ஓட்ஸ் மற்றும் ஆளி விதை கலவை, சீரகம், உப்பு சேர்க்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் மற்றும் நெய் சேர்க்கவும்.
  • மென்மையாக மாவை பிசைந்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • சப்பாத்தி கட்டையால் மாவை தேய்க்கவும்.
  • ஒரு சூடான தோசை கல்லில் தேய்த்த சப்பாத்திக்களை போட்டு கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

ஆளி விதைகளை உணவில் சேர்க்க வேறு சில வழிகள்

  • பொடித்த ஆளி விதை தூளை தோசை மாவில் கலந்து கொள்ளலாம் அல்லது சட்னியுடன் கலந்து கொள்ளலாம்
  • ஜூஸ்அல்லது ஸ்மூத்தீஸ் குடிக்கும் பழக்கம் இருந்தால் அதனுடன் கலந்து கொள்ளலாம்
  • ஆளி விதைகள் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். இருப்பினும், நீங்கள் உடல்நலக் கோளாறுக்கான சிகிச்சையில் இருந்தால், இந்த விதைகளை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP