தற்போது குளிர் நம்மை வாட்டி வதைக்கிறது. காலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்குடி குளிருக்குப் போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்க வேண்டும் என்று தான் தோணுகிறது. இதோடு ஸ்நாக்ஸ்களும் சேர்ந்துவிடுவதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. ஆனாலும் அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும் என்ற நினைப்பில், டயட் ஈடுபடுவது, ஜிம்மிற்குச் செல்வது போன்ற பல முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இதோ உங்களுக்காகவே ஆரோக்கியமான முறையில் எப்படி? உடல் எடையைக்குறைக்கலாம் என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே…
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைக்க வேண்டும் என்று நினைத்தால் கீரைகள் உங்களுக்கு சிறந்த தீர்வாக அமையும்.இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் கே, இரும்பு, கால்சியம், மெக்னீசியம் , நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளது. இவை அனைத்தும் உங்களது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்ப்பதோடு உடல் எடையை நிர்வகிக்கும் உதவுகிறது.
மேலும் படிங்க: உடல் எடைக்குறைப்பில் லெமன் டீ ரெசிபிகள்!
மேலும் படிங்க: இந்த ஜூஸ் குடிங்க.. குளிர்காலத்தில் சருமம் பிரகாசமாகுமாம்!
இதுப்போன்று பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கீரையில் அடங்கியுள்ளதால் நீங்கள் இதை உங்களது உணவு முறையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரை, சிறு கீரை, பொன்னாங்கன்னி, மொசு மொசு கீரை என உங்களுக்கு எது கிடைக்கிறதோ? அதை வைத்து நீங்கள் பருப்பு கூட்டு அல்லது கீரை பொரியல் செய்து சாப்பிடுங்கள். மேலும் வழக்கமாக நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளையும் உடன் சேர்த்து செய்வது நல்லது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]