herzindagi
lemon tea recipes

Lemon Tea For Weight Loss: உடல் எடைக்குறைப்பில் லெமன் டீ ரெசிபிகள்!

எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,  வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள அதிக கலோரிகளைக் குறைக்கிறது.
Editorial
Updated:- 2023-12-23, 15:15 IST

இன்றைக்கு நவீன கலாச்சாரம் என்கிற பெயரில் மக்களிடையே உணவு பழக்க வழக்கங்கள் முதல் அன்றாட பணிகள் அனைத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உடல் உழைப்பு இல்லாத வேலையால் ஒவ்வொருவருக்கும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் உள்ளது. இதில் உடல் எடை அதிகரிப்பை அனைவரும் சந்திக்க நேரிடுவதால், மூச்சுத்திணறல், மாரடைப்பு , மூட்டுவலி போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதனால் தான் அதிகரித்த உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை அவர்கள் எடுக்கிறார்கள். இதில் அனைவரின் முக்கியமான தேர்வாக உள்ள லெமன் டீ தான். ஆம் எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,  வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதிக கலோரிகளைக் குறைக்கிறது. ஆனாலும் முறையாக லெமன் டீயைத் தயாரிக்கவில்லை என்றால், இதை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதே வீண் தான். இதோ உடல் எடைக்குறைப்பிற்கு லெமன் டீயை எப்படியெல்லாம் பருகலாம்? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

lemon ginger tea

மேலும் படிங்க: ஜிங்க் குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்?

 எடை இழப்புக்கான லெமன் டீ ரெசிபிகள்

  • எலுமிச்சை தேநீர்: பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக தேயிலை தூளைக் கொதிக்கவிட்டு இறக்கிய பின்னதாக இறுதியில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து லெமன் டீ செய்வார்கள். இதுவும் உங்களது உடல் எடையைக்குறைப்பிற்கு உதவியாக இருக்கும்.
  • தேன் லெமன் டீ: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் அடுத்த தேர்வு தேன் லெமன் டீயாகத் தான் இருக்க முடியும். 
  • இதை செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி லேசாக சூடாக்கவும். பின்னர் அதனுடன் தேன் சேர்க்கவும். இவை இரண்டையும் சிறிது நேரத்திற்கு சூடாக்கிய பின்னதாக எலுமிச்சை சாறு சேர்த்தால் போதும் சுவையான தேன் லெமன் டீ ரெடி. 
  • தேன் மற்றும் எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது.
  • தேன் இஞ்சி லெமன் டீ: இதை செய்வதற்கு முதலில் நீங்கள்  இஞ்சியை நறுக்கி தண்ணீரில் நன்றாக கொதிக்கவிடவும். பின்னர் இதனுடன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக சூடாக்கினால் போதும் சுவையான தேன் இஞ்சி லெமன் டீ ரெடி.
  • நீங்கள் லெமன் டீயில் இஞ்சியைச் சேர்க்கும் போது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள தெர்மோஜெனெசிஸ் பசியின்மை மற்றும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளைக் குறைக்க உதவுகிறது.

lemon honey tea

மேலும் படிங்க: மகிழ்ச்சியாக வாழணுமா?  தினமும் இந்த பழக்கங்களைப் பாலோ பண்ணுங்க!

  • லெமன் டீயை நீங்கள் சூடான தேநீராகத் தான் பருக வேண்டும் என்பதில்லை. ஐஸ் கட்டி அல்லது ஐஸ் வாட்டரில் எலுமிச்சை சாறு  சேர்த்தும் பருகலாம். இது உங்களது உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக அமையும்.  

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]