herzindagi
Protein vegetables

Protein rich vegetables: புரத சத்துக்கள் நிறைந்த காய்கறிகளின் லிஸ்ட்!

நமது உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களின் ஒன்று தான் புரதம்.
Editorial
Updated:- 2023-12-28, 18:44 IST

நம்முடைய உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் முக்கியமான ஒன்று. அதிலும் புரதசத்துக்கள் என்பது அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்டது. உடலில் தசைகள் ஆரோக்கியத்திற்கும், எலும்புகள் வலுப்பெறவும் புரதம் கண்டிப்பாக தேவை. இதனால் தான் குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை புரோட்டீன் நிறைந்த பால், முட்டை, மற்றும் பிற அசைவ உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால் அனைவரும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடமாட்டார்கள். சைவ பிரியர்களுக்காகவே இதோ புரோட்டீன் நிறைந்த காய்கறிகளின் லிஸ்ட் இங்கே…

high protein list

புரதம் நிறைந்த காய்கறிகள்:

  • பட்டாணி, பச்சை பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளில் புரத சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்கு வலுச்சேர்க்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது. 
  • இதில் உள்ள பொட்டாசியம், அயர்ன், வைட்டமின்கள் இரத்த சர்க்கரை அளவைக்குறைக்கவும், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
  • ஆரோக்கியம் நிறைந்த சைவ உணவுகளில் மிக முக்கியமானது கீரை. இதில் புரதம், வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் கீரையில் நோயை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது எவ்விதமான உடல் நலப்பாதிப்புகளும் நமக்கு ஏற்படாது. 

மேலும் படிங்க: சரும ஆரோக்கியத்திற்கு உதவும் தர்பூசணி!

  •  மற்ற காய்கறிகளை விட ப்ரோக்கோலியில் அதிக புரதம் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் மற்றும் கொலாஜன் உற்பத்திக்கும் உதவியாக உள்ளது. 
  • ப்ரோக்கோலி மற்றும் பிற குரூசிஃபெரஸ் காய்கறிகளில் குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன. பல நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நோய் வராமல் தடுப்பதற்கும் ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆரோக்கியம் மற்றும் அதிக ஆற்றலைத் தரக்கூடிய உணவாக உள்ளது ஸ்வீட் கார்ன். ஒரு கப் சமைத்த ஸ்வீட் கார்னில் சுமார் 5 கிராம் அளவிற்கு புரதம் நிறைந்துள்ளது. எனவே நீங்கள் ஸ்வீட் கார்னை வேகவைத்தும்,வறுத்தும் சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.

High protein vegetables

இதுப்போன்று உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அஸ்பாரகஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பயிறு வகைளிலும் புரதம் நிறைந்துள்ளது என்பதால் சைவ பிரியர்கள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

  • முளைக்கட்டிய பயிறு வகைகள்: கம்பு, பச்சைப் பயிறு, சுண்டல் போன்ற பயிறுவகைகளை முளைக்கட்டிய நாம் சாப்பிடுவதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது.
  • நட்ஸ் வகைகள்: சைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் நட்ஸ்களை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ்களில் புரத சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக உள்ளது.

மேலும் படிங்க: பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படக்காரணம்?

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]