herzindagi
women affected by white discharge

white discharge causes in women: பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படக்காரணம்?

பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்றுகள் பாதிக்கும் போது தான் நிறமற்ற அந்த திரவம் வெள்ளை நிறத்துடன் வெளியேறுகிறது.
Editorial
Updated:- 2023-12-28, 17:00 IST

உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டும் நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகப் பயணிக்க முடியும். அதிலும் பெண்களுக்கு உள்ள இக்கட்டான வாழ்க்கைச் சூழலில் அவர்களின் உடல் நலம் சரியில்லையென்றால் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளும் தலைகீழாக மாறிவிடும். பெண்கள் மற்றவர்களைக் கணிவோடு கவனிக்கும் அதே சமயத்தில் அவர்களின் உடல்நலத்தையும் கொஞ்சம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

அதுப்போன்று இல்லையென்றால் பல உடல் நலத் தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான சில தொற்றுகளில் ஒன்றாக உள்ளது வெள்ளைப்படுதல். இந்த பாதிப்பைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறப்புறுப்பில் புண்கள், சிவத்தல் போன்ற பிரச்சனைகளோடு உடல் மெலிவும் ஏற்படும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதோ பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

WHITE discharge

பெண்களைப் பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை:

  • நம்மில் பலர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இந்த பாதிப்பு பெண்களுக்கு இயல்பான ஒன்று தான் என்றாலும் அலட்சியமாக விடும் போது பெரும்பாதிப்பை பெண்கள் சந்திக்க நேரிடும்.
  • சில நேரங்களில் பிறப்புறுப்பில் அதிக வலி, எரிச்சல், அரிப்பு, போன்றவை ஏற்பட்டாலும் பிசுபிசுத்தன்மையுடன் வெளிவரும் திரவம் துர்நாற்றத்துடன் வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை தேவை. இல்லையெனில் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர்ப்பாதை வழியாக தொற்றுகள் உடல் முழுவதும் வேகமாகப் பரவக்கூடும்.
  • இயல்பாக பெண்களுக்குப் பிறப்புறுப்பு செல் சுவர்களில் இயற்கையாகவே லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் சுரக்கும். இந்த திரவம் தான் பெண்களின் பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகள் மற்றும் கிருமிகளால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
  • ஒருவேளை பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்றுகள் பாதிக்கும் போது தான் நிறமற்ற அந்த திரவம் வெள்ளை நிறத்துடன் வெளியேறுகிறது. இதனால் பெண்களுக்கு சில நேரங்களில் வலி கூட ஏற்படக்கூடும். 

மேலும் படிங்க: குளிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ் தொற்றுகள்!

  • இதுப்போன்ற நேரத்தில் வெள்ளைப்படுதல் என்பது சூடு தான் என நினைக்காமல் முறையான மருத்துவ பரிசோதனையை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பெண்களுக்கு சிறுநீர்ப்பாதையும், பிறப்புறுப்பும் மிக அருகில் உள்ளதால் தொற்று அவர்களுக்கு வேகமாக பரவக்கூடும்.

வெள்ளைப்படுதல் எப்போது ஏற்படும்?

பெண்கள் பருவமடையும் காலத்துக்கு சில நாள்களுக்கு முன்பாகவும், மாதவிடாய்க்கு முந்தைய அல்லது பிந்தைய இரு நாள்களுக்கு வெள்ளைப்படுதல் பாதிப்பு ஏற்படும். இதோடு மட்டுமின்றி சில நேரங்களில் பிறந்த பெண்குழந்தைக்கும் அதனுடைய கருப்பையின் ஈத்திரோசன் வெளிப்பாடு காரணமாக வெள்ளைப்படுதல் ஏற்படக்கூடும். பிறந்த பெண்குழந்தைக்கும் சிறிது காலம் அதனுடைய கருப்பையின் ஈத்திரோசன் வெளிப்பாடு காரணமாக வெள்ளைப்படுதல் நிகழலாம். 

பாதிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

vaginal discharege ()

  • பெண்கள் பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்குப் பின்னதாக பிறப்புறுப்பை நன்றாக சுடு தண்ணீர் அல்லது வெது வெதுப்பான மஞ்சள் கலந்த நீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • உள்ளாடைகளைக் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும். காட்டன் துணிகளைத் தேர்வு செய்வது நல்லது.
  • தினமும் காலையில் வெந்தயம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிங்க: சரும ஆரோக்கியத்திற்கு உதவும் தர்பூசணி!

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]