புதினா இலைகளை நாம் பெரும்பாலும் சமைக்கும் உணவுகளில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் தமிழகத்தில் பிரியாணி பரிமாறும் போது புதினா துவையலும் இடம்பெறும். தோசையுடன் தொட்டு சாப்பிட புதினா சட்னி, மதிய வேளைக்கு புதினா சாதனம் என பல வகைகளில் புதினா நமது உணவுமுறையில் இடம்பெற்றிருந்து. புதினா இலைகளின் மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவின. ஒரு கட்டு புதினாவின் விலை குறைவாக இருந்தாலும் பிரியாணி தயாரிப்பின் போது மட்டுமே பெரும்பாலானோர் அதை பயன்படுத்துகின்றனர். இந்த கட்டுரையில் புதினா இலைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
புதினா இலைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் உள்ளது. சுருக்கமாக இதை கிருமி நாசினி எனக் கூறலாம். செரிமானத்திற்கு தேவையான ஜூஸ்களை உருவாக்கி உங்கள் வயிற்றை சிறப்பாக செயல்பட உதவும்.
புதினா இலைகளில் மெந்தோல் உள்ளது. இது நெஞ்சு எரிச்சலைப் போக்க உதவுகிறது. மேலும் சளி பிடித்திருக்கும் போது புதினா இலைகளை சாப்பிட்டால் மூக்கு அடைப்பு, தொண்டை கரகரப்பு ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.
புதினா இலைகள் நமது வாயில் உள்ள கிருமிகளை அழிக்கின்றன. பெரும்பாலான மவுத் பிரெஷ்னர்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதினா இலைகளை சாப்பிட்ட பிறகு வாயை கொப்பளிப்பது உங்களை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். புதினா இலைகள் வாயில் கிருமிகளை வளர விடாமல் தடுத்து பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
புதினா இலைகள் மூளைக்கான ஸ்பெஷல் டானிக் ஆகும். புதினா இலைகளை சாப்பிடுவது அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் மன விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும்.
மேலும் படிங்க புரதச்சத்து குறைபாடா ? நீங்கள் சாப்பிட வேண்டிய சைவ, அசைவ உணவுகள்
புதினா இலையின் வாசனை மன அழுத்தத்தை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது.
புதினா இலைகளில் சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது முகப்பருவை குணப்படுத்தவும், பிசுபிசுப்பாக இருக்கும் எண்ணெய் பசை சமருத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
புதினா இலைகள் கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதை தடுக்கின்றன.
புதினா இலைகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் ஒவ்வொமை எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதாகவும் இது பல்வேறு வகையான ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் எனவும் கண்டறியப்பட்டது.
மேலும் படிங்க நீண்ட ஆயுளுக்கு உட்கொள்ள வேண்டிய நார்ச்சத்து உணவுகள்
புதினா டீ குடிப்பது உங்கள் உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவும்.
புதினா எண்ணெயில் மெந்தோல் உள்ளது. இது செரிமான அமைப்பின் பொதுவான கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]