தேங்காய் தண்ணீரில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, ஆக்ஸிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகினின்கள் போன்ற பல்வேறு தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. ஜூஸ்களை போல் இல்லாமல் தேங்காய் தண்ணீரில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது.
தேங்காய் தண்ணீரின் நன்மைகள்
ஆற்றல் அதிகரிப்பு
உடற்பயிற்சியின் போதும் அதற்குப் பின்னரும் அருந்துவதற்கு தேங்காய் தண்ணீர் ஒரு சிறந்த பானமாகும். இது தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. தேங்காய் தண்ணீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.
உடற்பயிற்சியின் போது இந்த தேங்காய் தண்ணீரை குடித்தால் சோர்வு மற்றும் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம். தேங்காய் தண்ணீர் எந்த விளையாட்டு பானத்திற்கும் இயற்கையான மாற்றாகும். இதில் அதிக பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள், குறைவான சோடியம் மற்றும் பல விளையாட்டு பானங்களை விடக் குறைவான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
உடல் எடையைக் குறைக்க உதவி
உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள் போன்றவற்றை விட இதில் குறைவான உள்ளன. ஒரு கப் தேங்காய் தண்ணீரில் 48 கலோரிகள் மட்டுமே உள்ளன. தேங்காய் தண்ணீர் குடிப்பது உடல்எடையை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் நீரேற்றத்தை அதிகரிக்கறது.
மேலும் படிங்கWeight Loss Juices : குளிர்காலத்தில் எடை இழப்புக்கான சிறந்த ஜூஸ்கள்
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி
தேங்காய் தண்ணீரில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால் அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். பொட்டாசியம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் ஆதரிக்கப்படும் என ஆராய்ச்சி கூறுகிறது.
நல்ல செரிமானம்
தேங்காய் நீரில் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையை தடுக்கலாம்.
சிறுநீரக கற்களை தடுக்கும்
உங்களுக்கு சிறுநீரக கல் இருந்தால் மருத்துவர் நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்துவார். தண்ணீர் குடித்து சிறுநீரக கல் பாதிப்பை சரி செய்யலாம் என்றாலும் தேங்காய் தண்ணீர் குடிப்பது அதை விட சிறந்தது. தேங்காய் தண்ணீரை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். தேங்காய் தண்ணீரால் சிறுநீரில் உள்ள குளோரின் மற்றும் சிட்ரேட்டையும் வெளியேற்ற முடியும்.
ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும்
தேங்காய் தண்ணீர் குடிப்பது உங்கள் தினசரி நீரேற்ற தேவைகளுக்கு பங்களிக்கும். தேங்காய் தண்ணீர் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இயற்கையாகவே கொலாஜன் தொகுப்பைத் தூண்டுகிறது. இது உங்கள் சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும்.
மேலும் படிங்க Milk additives : பாலின் ஊட்டச்சத்தை அதிகரிக்க இவற்றை சேர்க்கலாம்
ஆண்களுக்கு நன்மையளிக்கும் தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீர் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு சாத்தியமான நன்மைகளைக் கொண்டுள்ளது. பாலியல் செயல்திறனுக்கு இரத்த ஓட்டத்தை பராமரிப்பது அவசியமாகும். இதற்கு தேங்காய் தண்ணீர் பெரிதும் உதவுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation