நாம் அன்றாடம் அருந்தும் பாலில் கால்சியம், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால் அது குழந்தைகளுக்கான முழுமையான உணவாக கருதப்படுகிறது. குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்து ஊட்டச்சத்துகலும் பாலில் உள்ளன. எனினும் பாலின் சுவை பல குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. இதனால் வெறுப்பு ஏற்பட்டு பால் அருந்துவதை குழந்தைகள் தவிர்க்கின்றனர்.
சில குழந்தைகள் தாய்மார்களின் வற்புறுத்ததால் ஒரு டம்ளர் பால் குடித்து விடுகின்றன. எந்தவொரு உணவையும் குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு மிகச் சுவையாக மாற்றுவது தாய்மார்மகளின் கைகளில் இருக்கிறது. குழந்தைகள் பால் குடிக்க வைக்க மாற்று வழிகள் பல உள்ளன.
பாலை ஊட்டச்சத்து சக்தியாக மாற்றுவதற்கு சில பயனுள்ள சேர்க்கைகள் மட்டுமே தேவையானவை. பால் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருந்தாலும் மற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அதன் ஆரோக்கிய நன்மைகளை மேம்படுத்தும். சில பொருட்களை சேர்ப்பதன் வழியாகப் பொது ஆரோக்கியத்தை வளர்த்திடும் சக்திவாய்ந்த பானமாக பாலை மாற்றலாம்.
இலவங்கப்பட்டை
பாலில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்ப்பது அதன் சுவையை மேம்படுத்துவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. இலவங்கப்பட்டை அழற்சியை குறைப்பதற்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவும். உங்கள் மனதை மயக்கும் பானமாகவும் இலவங்கப்பட்டை பாலை மாற்றிடும்.
சியா விதைகள்
பாலில் சேர்க்கப்படும் சியா விதை ஒரு சிறிய பொருளாகத் தோன்றலாம். ஆனால் அது சக்திவாய்ந்த ஊட்டமாகும். சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற முக்கிய தாதுக்கள் அதிகமாக இருப்பதால் பாலுடன் சேர்க்கப்பட்டு கூடுதல் ஆற்றல் மற்றும் ஊக்கத்தை தருகிறது. இதனால் உங்கள் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.
மேலும் படிங்கFoods for Kidney Health : சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகள்
தேன்
பாலில் ஒரு தேக்கரண்டி இயற்கையான தேன் சேர்த்தால் கூடுதலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கிடைக்கும். தொண்டை எரிச்சலை நீக்க தேன் ஒரு சிறந்த உணவாகும். அதேநேரம் பால் மற்றும் தேனின் கலவை சுவையானது மற்றும் சத்தானது.
மஞ்சள்
ஒரு சிட்டிகை மஞ்சளில் உள்ள குர்குமின் பாலை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த தங்க பானமாக மாற்றும். மஞ்சள் அதன் நன்கு அறியப்பட்ட அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற குணங்கள் காரணமாக சிறந்த நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்திறன் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கிறது.
பாதாம் வெண்ணெய்
பாலில் ஒரு டீஸ்பூன் பாதாம் வெண்ணெய் சேர்ப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும். வைட்டமின்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பாதாம் வெண்ணெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும் படிங்கHealth benefits of Dates : பேரிச்சம்பழம் உட்கொண்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
உலர் பழங்கள்
திராட்சை, பேரிச்சம்பழம், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை பொதுவாக உலர் பழங்களாகப் பயன்படுத்தப்படும். பாலின் சுவையை அதிகப்படுத்த ராஸ்பெர்ரி, புளுபெர்ரி போன்ற உலர் பழங்களையும் சேர்க்கலாம். உலர் பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை ஆகும். இவை பாலில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்க்கின்றன.
அவகேடோ
அவகேடோ பழம் புரதம், கொழுப்புகள், பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றின் வளமான மூலமாகும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதனுடன் தேன் இனைத்து பாலில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் சரியாகும். பாலும் மிகச் சுவையாக இருக்கும்.
குங்குமப்பூ
குங்குமப்பூவின் அதிக விலை காரணமாக மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளில் மட்டுமே இது பாலில் பயன்படுத்தப்படுகிறது. இது புற்றுநோயைத் தடுக்கிறது, ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்களில் பருவமடைவதற்கு உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை வளர்க்க உதவுகிறது. குங்குமப்பூ பாலை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.
டார்க் கோகோ
பாலுடன் சேர்க்க டார்க் கோகோ பவுடரைத் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான விருப்பமாக இருக்கும். டார்க் கோகோவில் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.
பழங்கள்
பாலை ஒரு மில்க் ஷேக்காக மாற்றுவது அதை எந்த நேரத்திலும் ஒரு இனிமையான பானமாக குடிக்க உதவும். தினமும் ஒரு பழத்தை மென்று சாப்பிட விரும்பாதவர்கள் அந்த பழத்தை சிறு சிறுதாக வெட்டி பாலுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து குடிக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation