ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் அவசியமானது. பெரும்பாலானவர்கள் காய்கறி பழங்கள் அல்லது சாலட் போன்ற உணவுகளை மட்டும் சாப்பிடுவதும், குறைவாக சாப்பிடுவதும் ஆரோக்கியமானது என்று கருதுகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவு முறையை பொறுத்தவரை பருப்பு மற்றும் பயறு வகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பீன்ஸ் வெவ்வேறு வடிவம், நிறம், சுவை மற்றும் அளவுகளில் கிடைத்தாலும் இவற்றின் நன்மைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த பீன்ஸ் வகைகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்து கொள்ளுங்கள்.
பீன்ஸ் தொடர்பான பல நன்மைகள் பற்றி மிஸ் இந்தியா போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் உணவியல் நிபுணரான அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஊட்டச்சத்து நிறைந்த பீன்ஸ் வகைகள் உடலுக்கு சிறந்த ஆற்றலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பீன்ஸ் வகைகளின் நன்மைகள் பின்வருமாறு.
பீன்ஸ் வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பீன்ஸ் வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதோடு மட்டுமின்றி இரத்தத்தையும் சுத்தப்படுத்த உதவுகின்றன.
பீன்ஸ் வகைகளில் ஏராளமான நார்ச்சத்தும், குறைவான கிளைசெமிக் குறியீடும் உள்ளது. இதுபோன்ற உணவுகள் உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகின்றன. மேலும் பீன்ஸ் வகைகளை சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலே வயிறு நிரம்பி விடும்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பாதையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவும் குறையும்.
பீன்ஸ் வகைகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ளும் பொழுது அது உங்கள் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும். இவை எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏறக்குறைய அனைத்து பீன்ஸ் வகைகளும் எலும்புகளுக்கு நன்மை பயக்கின்றன. இருப்பினும் உங்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு இருந்தால் பச்சை பயறு மற்றும் சோயாபீன்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதில் உள்ள சேர்மங்கள் புற்று நோய் போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதற்கு தேவையான வலிமையை உடலுக்கு தருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பீன்ஸ் சாப்பிடுவது சைவ உணவு உண்பவர்களுக்கும் மிகவும் நல்லது. தினசரி உடலில் செயல்பாட்டிற்கு 8-10 கிராம் புரோட்டின் போதுமானதாக இருக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு புரோட்டின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் புரோட்டின் குறைபாட்டை பூர்த்தி செய்ய மதிய வேளையில் சாதத்துடன் பருப்பு மற்றும் பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
பீன்ஸ் வகைகளை வேக வைத்து அல்லது முளைகட்டி சிற்றுண்டி ஆக சாப்பிடலாம். மேலும் பீன்ஸ் வகைகளைக் கொண்டு குழம்பு வகைகளையும் செய்யலாம். வேறு சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்த பின் பீன்ஸ் வகைகளை சாப்பிடுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]