நோய்வாய்ப்படுவதை தவிர்க்க உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்நிலையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் நம் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.
சூப்பர்ஃபுட் என விவரிக்கப்படும் முட்டையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு முழு முட்டையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரான பூஜா மகிஜா அவர்கள் பரிந்துரைத்த முட்டையின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் பார்க்கலாம். முட்டையில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், முட்டையை ஒரு முழுமையான ஆரோக்கிய உணவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை புரதத்தின் நல்ல ஆதாரம் ஆகும். இவை தசைகள், உடல் திசுக்கள் ஆகியவற்றை பராமரிக்கவும், அவற்றை சரிசெய்யவும் உதவுகிறது. எனவே ஆரோக்கியமான, வலுவான தசைகளை பெற முட்டை சாப்பிடலாம்.
மூளை மற்றும் நரம்பு மண்டலம் திறம்பட செயல்படுவதற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் முட்டையில் உள்ளன. இக்காரணத்தினால் புரதம் நிறைந்த முட்டை உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
முட்டையில் வைட்டமின் A, வைட்டமின் B12, செலினியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகின்றன. இதன் மூலம் நோய்வாய்ப்படுவதையும் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்புபவர்கள் முட்டையை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அமினோ அமிலம், ஹோமோசைஸ்டீன் ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகும். முட்டையில் உள்ள கோலின் இந்த அமினோ அமிலத்தை உடைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் ஆரோக்கியத்தை பராமரித்து இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
பொதுவாக பெண்களின் 9 மாத கர்ப்ப காலங்களிலும் முட்டை சாப்பிடும் படி நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் கருவில் வளரும் குழந்தையின் பிறவி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.
கண் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முட்டை நல்லது. முட்டையில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் வயது சார்ந்த குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது. முட்டையில் உள்ள மற்ற வைட்டமின்களும் கண் பார்வையை மேம்படுத்துகின்றன.
முட்டையில் உள்ள புரதம் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் முட்டையை சாப்பிடும் வேளையில் விரைவில் பசி எடுக்காது. இதன் மூலம் தேவையற்ற தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். தேவையற்ற அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் எடை குறைப்பு இலக்கை விரைவில் அடையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா
முட்டையை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும். இது உங்களை உள்ளிருந்து அழகாக்கும். முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் திசுக்களின் சிதைவை தடுக்கவும் உதவுகின்றன.
முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. முட்டையின் முழு ஆரோக்கிய நன்மைகளையும் பெற, அதை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். நாம் தினமும் சாப்பிடும் சமச்சீரான உணவுடன் முட்டையை ஒரு பகுதியாக சாப்பிடும் படி நிபுணர் அறிவுறுத்துகிறார்.
இந்த பதிவும் உதவலாம்: பிரயாணி இலை டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]