bay leaves tea : பிரயாணி இலை டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

பிரியாணி இலையை உணவில் சேர்த்துக் கொள்வதால்  நமக்கு எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கும்.அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

bay leaves health benefits in tamil

பிரியாணி இலை நம் உடலுக்கு நன்மை சேர்க்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவில் பிரியாணி இலையை நாம் கண்டெடுக்கும் போது அது நம்மை எரிச்சலூட்டும். எனவே நாம் எரிச்சல் படாமல் பிரியாணி இலையை உட்கொள்ள இங்கு சில வழிமுறைகள் உள்ளன. இந்த பிரியாணி இலை வைத்து ஒரு சுவையான டீ செய்து குடிக்கலாம். இந்த டீ நம்மை எந்த வகையிலும் எரிச்சல் படுத்தாது. மாறாக இது நமக்கு அமைதியை கொடுக்கும். அதே சமயம் பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உங்கள் உடலால் உறிஞ்சப்பட்டு விடும்.

பிரியாணி இலை டீ

தேவையான பொருள்

  • உங்களிடம் பசுமையான புதிய பிரியாணி இலை இருந்தால், 3-4 பிரியாணி இலைகள் எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். உங்களிடம் பசுமையான பிரியாணி இலை இல்லாத பட்சத்தில் காய்ந்த பிரியாணி இலைகள் பயன்படுத்தலாம்.
  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • பிரியாணி இலைகளை அதில் சேர்க்கவும்
  • ஒரு இரவு முழுவதும் அதை அப்படியே வைக்கவும்
  • அந்த நீரை வடிகட்டிய பிறகு ஒரு கப்பில் ஊற்றி கொள்ளவும். இப்போது பிரியாணி இலை டீ குடிக்க தயாராகி விட்டது.

பயன்கள்

நாம் பிரியாணி இலை டீ செய்முறையை பார்த்து விட்டோம். இப்போது இதை குடிப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி பார்க்கலாம்

இதய ஆரோக்கியத்திற்கு

பிரியாணி இலையில் ரூடின் மற்றும் கேஃபிக் அமிலம் இருக்கிறது. எனவே இந்த டீ குடித்தால் இதயத்தின் சுவர்கள் பலமாகி விடும். இத்துடன் சேர்ந்து இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் வாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.

வலியை குறைக்கிறது

இந்த இலையில் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மை உள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மூட்டு வலி மற்றும் ஆர்த்தரிடிஸ் எல்லா விதமான வலிகளும் குறைந்து விடும்.

how to use bay leaves for good haalth

புற்று நோயை எதிர்க்கும்

பிரியாணி இலையில் இருக்கும் சில பண்புகள் புற்று நோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இதில் பாலிநியூட்ரியன்ட்ஸ் மற்றும் காட்டேச்சின்ஸ் ஆகிய பொருட்கள் உள்ளன. இவை நம் உடலில் புற்று நோய் உருவாக்கும் செல்களை அழிக்கிறது.

சிறுநீரக கற்களை சரி செய்கிறது

அதிகப்படியான யூரியேஸ் என்பது சிறுநீரக கற்கள் மற்றும் மற்ற வாய்வு பிரச்சனைகளை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே பிரியாணி இலை உடலில் உள்ள யூரியேஸ் அளவை குறைக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

தொண்டை புண்களை குணமாக்கும்

பிரியாணி இலை தொண்டை வழியாக செல்லும் காற்றை அடைபடாமல் தடுக்கிறது. இதனால் பாக்டீரியா உள்ளே செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பிரியாணி இலை எந்த விதமான சுவாச பிரச்சனைகளை அகற்றுவதில் நலம் பயக்கும்.

கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது

ஒரு பரபரப்பான மற்றும் மனவுளைச்சலான நாளில் ஒரு கப் பிரியாணி இலை டீ குடிக்கவும். இந்த டீ உங்களுடைய எல்லா வகையான கோபம் மற்றும் மனவுளைச்சலே குறைக்கும். உங்களுக்கு நிம்மதியை தரும்.

இதுவம் உதவலாம் :இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா

நீரிழிவு நோய் எதிர்த்து போராடும்

தொடர்ந்து இந்த டீயை குடித்து வர, நம்முடைய இரண்டாம் நிலை நீரிழிவு நோயை எதிர்க்கும் சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் இது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் உடலில் க்ளூகோஸ் அளவு கட்டுப்படும்

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP